எந்த ஒரு படைப்பின் நம்பகத் தன்மையும் சொல்ல வந்த கருத்தில் அதற்கிருக்கும் தெளிவும்,உறுதிப்பாடும் சம்பந்தபட்டதாகும்! மூக்குத்தி அம்மன் ஒரு பக்தி படமுமல்ல,விழிப்புணர்வு படமுமல்ல! இது பச்சையான பாஜக ஆதரவுப் படம்! பக்தியின் உன்னதம் குறித்த புரிதலும் இல்லை! மறைபொருளாகத் திகழும் கடவுள் குறித்த புரிதலும் இல்லை! நாத்திகம் என்ற உயரிய கொள்கை குறித்த அடிப்படை அறிவும் இல்லை! முற்றிலும் அரைவேக்காட்டுத் தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது,மூக்குத்தி அம்மன்! இவை பற்றியெல்லாம் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கும் மக்களை மேலும் குழப்பி, ஏதோ விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல ஆங்காங்கே வசனங்கள் வருகின்றன! ...