முதலமைச்சருக்காக சாலையில் வாகனங்கள் முடக்கப்படுவதில் ஒரு நீதிபதி பாதிக்கப்பட்டதால் பொங்கி தீர்த்துவிட்டார்! நாம் எங்கு போய் பொங்குவது..? முற்றிலும் நிறுத்தப்படும் சாலை போக்குவரத்து! சல்சல்லென்று பரபரத்துக் கடக்கும் போலீஸ் வாகனங்கள்! முதலமைச்சர் காருக்கு முன்னும், பின்னுமாக சீறிச் செல்லும் ஏகப்பட்ட வாகனங்கள்! அது வரை முடக்கப்படும் போக்குவரத்துகள்! நாம் வாழ்வது ஜனநாயக யுகத்திலா? மன்னராட்சி காலத்திலா..? சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு மண்டபத்திற்கு வந்த போது கிரீன்வேஸ் சாலையில் போக்குவரத்து தடுத்து நிறுத்தப்பட்டது. அதில் ...