மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள்..! ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், கெடுபிடிகள், நெருக்கடிகள்! இன்னும் எத்தனைக் காலம் கொரானா,ஒமிக்கிரான் பயம் காட்டி மக்களை இம்சிக்க போகிறார்களோ..? வாழ்வதா..? சாவதா..? மக்களை நிம்மதியாக வாழவிடக் கூடாது என உலகில் சில அரசாங்கங்களே சங்கல்பம் எடுத்துக் கொண்டதாக நினைக்கத் தோன்றுகிறது! நோய்கள் வரும், போகும்! மனிதகுலம் நோயை எதிர்த்துப் போராடும் மனவலிமை கொண்டது தான்! மனிதனின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி வரலாற்றில் பல நோய்களை எதிர் கொண்டு வெற்றி பெற்றுள்ளது. இன்றைக்கு அரசாங்கங்கள் கடை பிடிக்கும் அராஜக அணுகுமுறைகள் நோய்க்கு எதிரானதாக ...