ஜனவரி- 3 முதல் 15 லிருந்து 18 வயதிற்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற பிரதமர் மோடி அறிவித்துள்ளதை புகழ் பெற்ற ஆங்கில மருத்துவர்கள் பலர் ”இது அறிவியல் பூர்வற்றது, அவசர கதியிலானது, தேவையற்றது” என தெரிவித்துள்ளனர்! எதிர்ப்பு வலுக்கிறது! புகழ்பெற்ற எய்ம்ஸ் நிறுவனத்தின் மருத்துவர் சஞ்சய் கே ராய். இவர் கோவேக்சின் பரிசோதனை முயற்சிகளின் முதன்மை ஆய்வாளர். இவர் பப்ளிக் ஹெல்த் அசோஷேசியன் தலைவராகவும் உள்ளார். சிறுவர்களுக்கு கொரானா தடுப்பூசி குறித்து இவர் கூறும் போது, ”குழந்தைகளுக்கு கொரானா மிகவும் அரிதாகவே ...

மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள்..! ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், கெடுபிடிகள், நெருக்கடிகள்! இன்னும் எத்தனைக் காலம் கொரானா,ஒமிக்கிரான் பயம் காட்டி மக்களை இம்சிக்க போகிறார்களோ..? வாழ்வதா..? சாவதா..? மக்களை நிம்மதியாக வாழவிடக் கூடாது என உலகில் சில அரசாங்கங்களே சங்கல்பம் எடுத்துக் கொண்டதாக நினைக்கத் தோன்றுகிறது! நோய்கள் வரும், போகும்! மனிதகுலம் நோயை எதிர்த்துப் போராடும் மனவலிமை கொண்டது தான்! மனிதனின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி வரலாற்றில் பல நோய்களை எதிர் கொண்டு வெற்றி பெற்றுள்ளது. இன்றைக்கு அரசாங்கங்கள் கடை பிடிக்கும் அராஜக அணுகுமுறைகள் நோய்க்கு எதிரானதாக ...

எதற்கிந்த கெடுபிடிகள்! தேவை இல்லாத பரிசோதனைகள். அத்தனை மக்களுக்கும் இது சாத்தியமா? இதனால் நேரவிரயமும், நெருக்கடிகளுமே கூடும். பெரும் மக்கள் திரளுடன் தேர்தல் பிரச்சார ஜனநாயகத் திருவிழா இத்தனை நாட்களாக நடந்தது தானே! அப்ப என்ன கொரோனா ஓய்வெடுக்கப் போனதா? நாளை அது வாக்குச் சாவடிகளுக்கு ‘ஸ்பெஷல் விசிட்’ செய்ய இருப்பதாக அதிகாரிகளுக்கு சொன்னதா..? வாக்குப் பதிவின் போது கொரானா நெருக்கடிகளை செய்வதன் உள்நோக்கம் என்ன? ஆறடி இடை வெளியிட்டு தான் நிற்க வேண்டும். முகக் கவசம் போட்டுத் தான் வர வேண்டும். சாணிடைசர் ...