மூத்த பத்திரிகையாளர் மணா எழுதியத் தமிழகத் தடங்கள் எனும் இந்த நூல், சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சமூக கலைக் களஞ்சியம் என்றால் மிகையல்ல! நாம் வாழும் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய கலாச்சாரத் தடயங்கள், வரலாற்றுக் குறியீடுகள், மிகப் பெரிய ஆளுமைகளின் வாழ்ந்த சுவடுகள், சமூக அடையாளங்கள்.. குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய – ஆனால், தெரியாமலே கடந்து போகின்ற – நுட்பமான செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார் பத்திரிகையாளர் மணா! முதல் கட்டுரை சாம்பல் நத்தம் தொடங்கி 75வது கட்டுரை கீழடி முடிய அனேக அரிய ...