விடுதலையை நோக்கிய மகத்தான யாத்திரையை உயிர்ப்புடன் சித்தரிக்கும் நூல்! திருமதி சித்ரா தமிழகத்திற்கு தந்துள்ள புத்தகமிது. தமிழகமும் கர்நாடகமும் ஒருசேர அறிந்த புகழ்வாய்ந்த எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் ’உப்பு என்னும் ஆயுதம்’ என்கிற சுருக்கமான அறிமுகவுரையை தந்துள்ளார்.  வானத்தில் வட்டமிடும் பறவையின் வேகம் எப்போதும் கொண்டவர் சித்ரா என பாவண்ணன் அறிமுகம் நிறைவான வரியைத் தருகிறது. அன்று இருந்த இந்திய அரசியல் சூழல்- வரிகொடா இயக்கம், சத்தியாகிரக போராட்டங்கள் ஊடாக  உப்பை ஆயுதமாக்கி மக்கள் திரள் போராட்டமாக தண்டியாத்திரை நடந்ததை பாவண்ணன் சொல்லி செல்கிறார். காந்திய அணுக்கம் ...