ஓட்டுப்போடுவதோடு முடிந்துவிடுவதல்ல வாக்காளர்களின் உரிமை! நம் தேவைகளை மக்கள் பிரதிநிதிகளை பேசச் சொல்லி நாம் ஆணையிடமுடியுமா.? அதற்கான வழிமுறைகள் உண்டா..? செயல்படுத்துவோம்! முறையான சனநாயகம் வீழ்ச்சியடைந்து வரும் இந்த இருண்ட காலத்தில், ஒரு ‘வாக்காளர்களின் ஆணையை ’ ஐக்கிய விவசாயிகள் முன்னணி’ வெளியிட முடிவு செய்துள்ளது. சனநாயகத்தின் இயக்க ஆற்றல் குறைந்து கொண்டிருக்கும் தருணத்தில், தெருக்களிலே சனநாயகம் மீட்கப்படுகிறது. ‘வாக்காளர்களின் ஆணை’ (voters whip) சக்திவாய்ந்தது என்றாலும் அதன் பின்னால் உள்ள கருத்து எளிமையானது. இப்போது ஒவ்வொரு கட்சியும் அதன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ‘இந்தெந்த ...