கருக் கலைப்பை மறுப்பதாலும், சிக்கலுக்கு உள்ளாக்குவதாலும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் மரணிக்கிறார்கள்! அமெரிக்காவில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதற்கு அங்கு பெண்கள் பொங்கி எழுந்துள்ளனர்! கருக்கலைப்பு என்பதை ஏன் பெண்ணின் உரிமையாக கருத வேண்டும்? அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. கருக்கலைப்பு செய்வது தொடர்பான சட்டத்தை,  அந்தந்த மாநிலங்கள் இயற்றிக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு அங்குள்ள பெண்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், நம் நாட்டில் கருக்கலைப்பு வசதிகள் ...

வீரப்பனின் அண்ணன்,  மாதையன் 33 வருடங்களாக சிறையிலேயே இருந்து 74 வயதில் சமீபத்தில் இறந்து போனார்.இது போல முதுமையையும் நோய்களையும் சுமந்து கொண்டு மரணத்தை எதிர் நோக்கியுள்ளவர்களை ஏன் விடுதலை செய்ய முடிவதில்லை? சிறைச் சாலைகளில் ஏன் மனித உரிமைகளுக்கு மரியாதை இல்லை? ”மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு எனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது”, என்று இறப்பதற்கு சில நாட்கள் முன்பு சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  வந்த போது, மாதையன் தன்னிடம் சொன்னதாக, நீண்டகால சிறைவாசியாக இருந்த ...

ஆதிவாசிகள் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டு வருவதை தோலுரித்துக் காட்டும் சிறந்த அரசியல் திரைப்படம்! தங்கள் நிலவுரிமையை மீட்டெடுக்க நான்கு ஆதிவாசி இளைஞர்கள் நிகழ்த்திய அதிரடி சாகஸம் தான் இந்தப் படம்! சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிஜ சம்பவம் தான் தற்போது சினிமாவாகியுள்ளது! ‘ பட’  மலையாளப்படம் தற்போது பிரைம் தளத்தில் ஓடிக் கொண்டு இருக்கிறது. பட என்ற சொல்லுக்கு படை என்பது பொருள். ‘அய்யங்காளி படை’ என்ற அமைப்பைச் சார்ந்த நான்கு பேர் மாவட்ட ஆட்சித்தலைவரை,  அவரது அலுவலகத்திலேயே  பணயக் கைதியாக்கி வைத்திருக்கிறார்கள். ...

‘பாஜகவிடம் ஆட்சியைக் கொடுத்தால் என்னவாகும்’ என்பதற்கு கர்நாடகமே கண்கண்ட சாட்சியாகிறது! அமைதியான கல்வி நிலையங்கள் அல்லோலகலப் படுகின்றன! ‘ஹிஜாப்’ என்பது முஸ்லீம் பெண்களின் அடிப்படை உரிமையா? அல்லது அடிமைப்படுத்தும் உடையா? என்ற வாதங்களும் வலுப்பெற்றுள்ளன! இது நாள் வரை இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் எனப்படும் முக்காடு அணிந்து வருவது சாதாரண நிகழ்வாக இருந்த கல்லூரி, பள்ளிகளில் எல்லாம் இன்றைக்கு அப்படி அணிந்து வந்த மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்! இதனால்,சில மாணவிகள் இன்று தேர்வு எழுத அனுமதி இல்லாமல் திருப்பி அனுப்பபட்டு உள்ளனர். இந்த ...

உலகம் முழுவதுமுள்ள அரசுகளையும், மக்களையும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய நோய் – கொரொனா. கொரானா தாக்கத்தாலும், அதன் மீது உருவான மிகை அச்சத்தாலும் எண்ணற்ற மக்கள் செத்து மடிந்தனர். அலோபதியில் முறையான சிகிச்சை கண்டுபிடிக்கப்படாமலேயே கொரொனா கட்டுக்குள் வந்து விட்டதாக உலக அரசுகள் அறிவிக்கத் தொடங்கின. மரபு வழி மருத்துவங்களில் சிகிச்சைக்கான சாத்தியங்கள் இருந்தும் அவற்றுக்கான முறையான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதெல்லாம் பழைய கதை. கொரோனா அச்சம் பரவிய போதே மருந்து நிறுவனங்களும், அரசுகளும் தடுப்பூசி என்ற சொல்லை உச்சரிக்கத் துவங்கின. படிப்படியாக நோய்த்தாக்கம் ...

இந்திய ராணுவத்திற்கானவற்றை உற்பத்தி செய்யும் ஆவடி டேங்க் தொழிற்சாலை உள்ளிட்ட 41 ஆலைகளை தனியாருக்கு தாரை வார்க்கிறது பாஜக அரசு. இதை தொழிலாளர்கள் எதிர்த்து போராடினால் சிறை தண்டனை, அவர்களை ஆதரிப்போருக்கும் சிறை தண்டனையாம்! 75 ஆண்டு கால சுதந்திர இந்தியா கட்டிக் காப்பாற்றிய தொழிற்சங்க ஜனநாயக உரிமைகளை ஒழித்துக் கட்ட ஏழே நிமிடத்தில் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு! இதன் படுபாதகங்களை பார்ப்போமா..? ஜனநாயக உரிமையை பறிக்கும் வகையில்  ஒன்றிய அரசு ‘அத்தியாவசியப் பாதுகாப்பு சேவைச் சட்டத்தை’ (Essential Defence ...

ஓட்டுப்போடுவதோடு முடிந்துவிடுவதல்ல வாக்காளர்களின் உரிமை! நம் தேவைகளை மக்கள் பிரதிநிதிகளை பேசச் சொல்லி நாம் ஆணையிடமுடியுமா.? அதற்கான வழிமுறைகள் உண்டா..? செயல்படுத்துவோம்! முறையான சனநாயகம் வீழ்ச்சியடைந்து வரும் இந்த இருண்ட காலத்தில், ஒரு ‘வாக்காளர்களின் ஆணையை ’ ஐக்கிய விவசாயிகள் முன்னணி’  வெளியிட முடிவு செய்துள்ளது. சனநாயகத்தின் இயக்க ஆற்றல் குறைந்து கொண்டிருக்கும் தருணத்தில், தெருக்களிலே சனநாயகம் மீட்கப்படுகிறது.  ‘வாக்காளர்களின் ஆணை’ (voters whip) சக்திவாய்ந்தது என்றாலும் அதன் பின்னால் உள்ள கருத்து எளிமையானது. இப்போது ஒவ்வொரு கட்சியும் அதன் நாடாளுமன்ற,  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு   ‘இந்தெந்த ...

கைதிகளை சித்திரவதை செய்வதில், இந்தியாவில் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்த  மாநிலமாக  தமிழ்நாடு உள்ளது ! இப்போதுள்ள சிறைகள், அடிமை ஆட்சி கால சிறைகளை விட மோசமாக உள்ளன. எமர்ஜென்சி சிறைக்கொடுமைகளை ஆராய்ந்த ‘இஸ்மாயில் ஆணையத்தின்’ பரிந்துரைகள் இன்னும்  அமலாக்கப்படவில்லை..! ‘சிறைகளில் தொடரும் சித்திரவதைகள்’ என்ற பொருளில்,  வாழ்நாள் சிறைவாசியாக இருந்த தியாகு, சமீபத்தில் நடைபெற்ற  கருத்தரங்கில் பேசினார். “மன்னன் காலத்தில் யானைக்காலால் இடற வைத்து மரண தண்டனை அளிக்கப்பட்டது; தேர்க்காலில் ஏற்றியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு மாற்றாகத்தான்   இப்போதைய சிறைகள் இருக்கின்றன. சமூக ...

எதற்காக மனித உரிமை ஆணையம்..? மனித உரிமையாவது..மண்ணாங்கட்டியாவது.. என்பவரா மனித உரிமை ஆணையத்தின் தலைவர்..! அருண்மிஸ்ரா நீதிபதியாக இருந்த போது வழங்கிய தீர்ப்புகள் சொல்கின்றன..அவர் எதற்கான தகுதி கொண்டவர் என….! இனி மனித உரிமை ஆணையத்தின் எதிர்காலம் என்னாகும்…? ” அதிகாரத்தை சந்தேகிக்காதவர்கள், ஆதிக்கத்தை கேள்வி கேட்க முடியாதவர்கள் உரிமைகளுக்கான இயக்கத்தில் பங்களிக்க முடியாது ” என்பார்  மனித உரிமைப் போராளி பேரா.கே.பாலகோபால். அரசாங்கத்தாலோ,அதிகாரிகளாலோ  பாதிக்கப்பட்டால்,  சாதாரண மக்களுக்கு உடனடியாக ஞாபகம் வருவது மனித உரிமை ஆணையம்தான். அதற்கு  தலைவராக ஓய்வு பெற்ற உச்ச ...

சிறைச்சாலைகள் என்றால், அது கொடூர குற்றவாளிகளின் இடம் என்பது பொது புத்தி!. ஆனால் சிறையில் உள்ளவர்களில் மிக பெரும்பாலோர் ஷண நேர உணர்ச்சி வேகத்தால் குற்றமிழைத்தவர்களே. மற்றும் பலர் தங்களை நிரபராதி என நிருபிக்க முடியாமல் சிறைபட்டவர்கள். பெரும்பாலான கிரிமினல்கள் சிறைப்படுவதில்லை.சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி சுலபமாக விடுதலையாகி விடுகிறார்கள்! சிறைவாசிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள்..? கண்ணியமாக வாழும் உரிமை அவர்களுக்கு இல்லையா? “முதல் விடுதலைப் போரில் (1857) தங்கள் ஆட்சியை இழக்கும் நிலை வரை சென்ற வெள்ளையர்கள்,  இந்தியர்களை அடக்குவதற்காக உருவாக்கப்பட்ட சிறை விதிகளைத்தான் (1864) ...