சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு. சஞ்சீப் பானர்ஜீ மேகாலயா உயர்நீதி மன்றத்திற்கு ” நீதி பரிபாலனத்தை செவ்வன செய்யும் பொருட்டு” (better administration of justice) மாற்றப்படுகிறார் என்பது செய்தி. இச்செய்தி அனைவரையும் துணுக்கிட வைத்தது. காரணம் திடுதிப்பென்று இத்தகைய மாறுதலுக்கான காரணம் என்ன என்று எல்லோரும் மண்டையை பிய்த்துக் கொண்டாலும் விவரம் அறிந்தவர்கள், ”இம்மாறுதல் ஒருவகையில் எதிர்பார்த்த ஒன்றுதான் , ஏனெனில், பானர்ஜீ தன்னிச்சையாய் நடக்க கூடியவர், அதிகார மையங்களுக்கு வளைந்து கொடுக்காதவர், உண்மை மற்றும் சட்ட ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கை ...
கைதிகளை சித்திரவதை செய்வதில், இந்தியாவில் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது ! இப்போதுள்ள சிறைகள், அடிமை ஆட்சி கால சிறைகளை விட மோசமாக உள்ளன. எமர்ஜென்சி சிறைக்கொடுமைகளை ஆராய்ந்த ‘இஸ்மாயில் ஆணையத்தின்’ பரிந்துரைகள் இன்னும் அமலாக்கப்படவில்லை..! ‘சிறைகளில் தொடரும் சித்திரவதைகள்’ என்ற பொருளில், வாழ்நாள் சிறைவாசியாக இருந்த தியாகு, சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசினார். “மன்னன் காலத்தில் யானைக்காலால் இடற வைத்து மரண தண்டனை அளிக்கப்பட்டது; தேர்க்காலில் ஏற்றியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு மாற்றாகத்தான் இப்போதைய சிறைகள் இருக்கின்றன. சமூக ...