ஒரு மாலை நேரம் ஜெயகாந்தன் இல்லம் சென்றேன்.”தோழர், முன்பு ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்று துக்ளக்கில் எழுதினீர்கள்.அது 1973 ல் எழுதினீர்கள். அதற்கு பின்பு எவ்வளவோ அரசியல் அனுபங்கள் ஏற்பட்டிருக்குமல்லவா?அதை நீங்கள் எழுதலாமே என்றேன். உடனே அவரிடமிருந்து வேகமாக ஒரு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என நான் எதிபார்க்கவில்லை. “ஆமாம், நல்ல யோசனை! சோவிடம் பேசட்டுமா?”என்றவர், செல்போன் எங்கே என சுற்றும்,முற்றும் பார்த்து,தேட தொடங்கியதும், தோழர்,ஒரு நிமிஷம்,துக்ளக்கில் நீங்க இப்ப எப்படி எழுத முடியும்..?என்றேன். ”ஏன்..?  என்றார். “இல்ல தோழர், முன்பு நீங்கள் ...