தமிழ்நாடு அரசு நிர்வாகத்திற்குள் ஆர்.எஸ்.எஸ் ஆதிக்கம் எப்படி எல்லாம் நுழைந்து இடம் பிடிக்கிறது என்பதற்கு இன்னும் ஒரு சாட்சியாக கல்வித் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பு ஆர்.எஸ்.எஸ் காரார் கைகளுக்கு போயுள்ளது கவலையுடன் விவாதிக்கப்படுகிறது.
2019 ஆகஸ்டில் அன்றைய அதிமுக ஆட்சியில் கல்வி தொலைக்காட்சி ஒன்று தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக தோற்றுவிக்கப்பட்டது. இந்த தொலைகாட்சியானது கொரோனா காலகட்டத்தில் பள்ளிக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் இதில் அவரவர்களுக்கு உரிய பாடதிட்டங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது தொடங்கி தன்நம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகளும் இடம் பெற்று வருகின்றது.
தற்போதைய திமுக அரசு கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை (CEO) நியமிக்க முடிவு செய்து, அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் மிக்க ஊடகவியல் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் CEO பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் மே 28 ஆம் தேதி அறிவித்தது.
இதற்கு தமிழ் புலமை, தொடர்பு திறன், கணினிகளை கையாளும் திறன், நடைமுறைக்கேற்ப அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன், நிர்வாகத்திறன் ஆகியன கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பொறுப்புக்கு எவ்வளவோ தகுதியான பலர் இருக்க, தீவிர ஆர்.எஸ்.எஸ்காராக அறியப்பட்டுள்ள சாணக்கியா யூ டுயுப் சேனலின் உரிமையாளரான ரங்கராஜ் பாண்டேயின் கூட்டாளியான மணிகண்ட பூபதி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது அரசியல், சமூக தளத்தில் மட்டுமின்றி ஊடகத் துறையிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மணிகண்ட பூபதி ஊடகத் துறையில் தினமலர் இதழில் ரங்கராஜ் பாண்டேவுடன் வேலை செய்தவராவார். பிறகு அவர் அங்கிருந்து தந்தி டிவியில் வேலைக்கு சேர்ந்தார்.
ரங்கராஜ் பாண்டேவுக்கு தினமலரில் பொய் செய்தி தந்ததால் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த இளம்பெண் செங்கொடி என்பவர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை மறுக்கப்பட்டு நீண்ட நெடுங்காலமாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த உயிர் தியாகம் பெரும் நெகிழ்ச்சியையும், அனுதாபத்தையும் தமிழகத்தில் உருவாக்கிய நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது காதல் தோல்வியால் என தினமலருக்கு நியூஸ் தந்தார் ரங்கராஜ் பாண்டே. பின்னர் விசாரணையில் அது பொய் செய்தி என தெரிய வந்ததில் நிர்வாகம் ரங்கராஜ் பாண்டேவுக்கு எந்த அசைன்மெண்டும் தராமல் மூலையில் உட்கார வைத்துவிட்டது.
இந்த நிலையில் தினமலரில் முடங்கித் தவித்த பாண்டேவை தினத்தந்தி தொலைக்காட்சிக்கு அழைத்து வந்தவர் இந்த பூபதி தான்! பின்னர் இவர் புதிய தலைமுறையிலும் சில காலம் வேலை செய்தார். பாண்டே தினத்தந்தியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தனியாக சாணக்கியா யூ டியூப் சேனல் தொடங்கிய போது, அதில் ஒரு பங்குதாராக பூபதியும் இணைந்து கொண்டார். இவர்கள் இருவருமே ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவர்களாவர். சாணக்கியா யூ ட்யுப் சேனலில் ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் அஜந்தாக்களைத் தான் இவர்கள் செய்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே!
கல்வி தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளான நிலையில் தற்போது ஏன் தலைமைச் செயல் அதிகாரி பதவி உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரியவில்லை. ஒரு நிறுவனத்தின் கொள்கை வழிப் போக்கை தீர்மானிப்பவர் அதன் சி.இ.ஓ என சொல்லப்படும் தலைமைச் செயல் அதிகாரி தான்.
”தமிழகத்தில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பிலான ஒரு தொலைக் காட்சிக்கு இது போன்ற நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இளம் மாணவர்கள் நெஞ்சில் நஞ்சை விதைப்பதாக ஆகிவிடாதா..?” என்ற கேள்வி பல தரப்பிலும் எழுப்பப்படுகிறது.
இந்தப் பதவிக்கு மொத்தம் எழுபது பேர் விண்ணப்பித்தனர் என்றும், அதில் 16 பேர் தேர்வாகி முதல் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டதில் 11 பேர் பங்கேற்று உள்ளனர். பிறகு கடைசி நேர்காணலில் மூன்றே மூன்று பேர் மட்டுமே அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அபிநயா, தேவப் பிரியன், பூபதி ஆகிய மூவரில் பூபதி மட்டும் தேர்வாகி உள்ளார். இதெல்லாமே ஒப்புக்காக செய்யப்பட்ட நடவடிக்கைகள் என்பதைப் போல சொல்லப்படுகிறது. பூபதியை தேர்வு செய்ய வேண்டும் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டது எனவும், இதில் தமிழக கவர்னர் ஆர்வம் காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இதே பதவிக்கு விண்ணப்பித்து இருந்த சுசி திருஞானம் என்ற மூத்த ஊடகவியலாளர் முதல் அமைச்சருக்கு ஒரு திறந்த மடல் என பகிரங்க கடிதம் ஒன்றை ஊடகங்களில் வெளியிட்டு உள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கான ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை கல்வி மாத இதழ்களின் ஆசிரியரும், சன் நியூஸ் தொலைக்காட்சியின் முன்னாள் Channel Head டுமாக இருந்தவர் திருஞானம். இன்றைய பல பிரபல பத்திரிகையாளர்களுக்கு குருவாகத் திகழும் இவர் முதல்வருக்கு எழுதியுள்ள திறந்த மடலில் கூறியிருப்பதாவது :
“தமிழ் மக்களிடையே மதப்பிரிவினைவாதத்தை தூண்டிவிட்டு அம்பலப்பட்டு நிற்கும் ‘சங்கி’ பாண்டேவின் சாணக்யா டிவி யின் பங்குதாரரும் மதப்பிரிவினைவாத கோட்பாட்டாளருமான மணிகண்ட பூபதி என்பவர், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் CEO வாக நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னம்பிக்கையை விதைக்கும் ஆக்கபூர்வ ஊடகவியலாளர்’ என்று டாக்டர் கலாம் அவர்களால் பாராட்டப்பட்ட நான் கல்வி தொலைக்காட்சியின் CEO பொறுப்புக்கு விண்ணப்பத்திருந்தபோதும், என்னை நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் திட்டமிட்டு புறக்கணித்ததன் காரணம் இதுதானா?
விஜய் டிவி நியூஸ், சன் நியூஸ், பாலிமர் நியூஸ், நியூஸ் ஜெ உள்ளிட்ட முக்கிய தொலைக்காட்சிகளில் 10 ஆண்டு காலம் தலைமைப் பொறுப்பு அனுபவமும், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் உலகத் தரமான ஜீனியஸ் புன்னகை, கிட்ஸ் புன்னகை கல்வி மாத இதழ்களுக்கு 15 ஆண்டு காலம் ஆசிரியர் பணி அனுபவமும் கொண்ட எனது விண்ணப்பத்தைப் புறக்கணித்து, நேர்காணலுக்குக்கூட அழைக்காமல் தவிர்த்ததன் காரணம் இதுதானா?
தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரிடையே அறிவியல் பார்வையையும் தன்னம்பிக்கையையும் விதைப்பதில் மவுனமான பெரும் பங்களிப்பை நான் செய்திருப்பதை தலைமைச் செயலரும், முதல்வரின் முதன்மைச் செயலாளருன் நன்கறிவார்கள்.
சன் நியூஸ், நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சிகளில் எனது ‘சந்திப்போம் சிந்திப்போம்’ நிகழ்ச்சியும், ‘நம்பிக்கை’ நிகழ்ச்சியும் மாணவர்களின் உயர்கல்வி – வாழ்க்கைப்பணி தேர்வுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் என்பதை முன்னணி ஊடகவியலாளர்கள் அனைவரும் அறிவார்கள்.
சமத்துவம், சமூக நீதி தத்துவங்களில் புடம்போடப்பட்ட என்னை திட்டமிட்டு தவிர்த்து விட்டு, கோமிய கோட்பாட்டாளரை கல்வி டிவி யின் தலைமைப் பொறுப்பில் நியமித்தது யார்? தமிழக அரசின் கல்வி சார்ந்த முடிவுகள் நாக்பூரில் இருந்து எடுக்கப்படுகின்றனவா?
Also read
இதற்காகவா தமிழ்நாட்டின் ஆக்கபூர்வ ஊடகவியலாளர்கள் இரவுபகலாக உழைத்தோம்? ‘திராவிட மாடல் அரசு’ என்ற கம்பீரமான தமிழரசு ஓராண்டு சாதனை மலரில், “நான் முதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்த நாள் தமிழ்நாட்டின் பொன்னாள்” என்று எத்தனை நம்பிக்கையோடு எழுதினேன். அதற்குள் எத்தனை மாற்றங்கள் வெட்கம் தான் மிஞ்சுகிறது.
கல்வி தொலைக் காட்சியில் சி.இ.ஓ பொறுப்பு வேண்டும் என்ற சுயநலத்தில் நான் இதனை எழுதவில்லை. குறைந்தபட்ச அறிவியல் நோக்கும், சமூக அக்கறையும் கொண்ட வேறு யாரையாவது அங்கு நியமியுங்கள். இளைய தலைமுறையின் மனங்களில் நச்சு விதையைத் தூவும் கோமியக் கோட்பாட்டாளர்கள் அங்கு வேண்டவே வேண்டாம்”
என திருஞானம் குறிப்பிட்டு உள்ளார்.
என்னதான் நடந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியலில் என்பது விளங்கவே இல்லை.
அஜிதகேச கம்பளன்
அறம் இணைய இதழ்
RSS ஒரு ராணுவ கட்டுப்பாடு கொண்ட சமூக இயக்கம் என்று கருணாநிதியால் சொல்ல பட்டு விட்டது. ஆகையால் RSS இன் கல்வியும் மிகுந்த ஒழுக்கத்துடன், சமூக பொறுப்புடன் இருக்கும் என்பதில் எனக்கு எள் அளவும் சந்தேகம் இல்லை. சமசீர் கல்வியை கொண்டு வந்து CBSE பள்ளிகள் புற்றிசல்கள் போல பல்கி பெருக காரணமாக இருந்த கருணாநிதியை யாரும் கேள்வி கேட்கவில்லை. மத்தியில் நடக்கும் அனைத்து அனர்தங்களுக்கும் காரணம் காங்கிரஸ் என்றால் தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்து அனர்தங்களுக்கும் காரணம் திமுகவாக தான் இருக்க முடியும்.
RSS மனித குலத்தின் முதல் எதிரி
கொஞ்சம் கூட தொடர்பு இல்லாமல் உளறியுள்ள anonymous யாரோ?
Anonymous solvadu 100% correct. RSS is a TERRORIST ORGANISATION. It should be BANNED IMMEDIATELY.
பாடநூல்களும் இந்துத்துவா சார்பு நிலை எடுத்துள்ளன. சிறுபான்மையினர் மீதான வெறுப்பரசியலை விதைக்கும் செயலை இவை திறம்படச் செய்கின்றன.
எனது ‘கல்வி அபத்தங்கள்’ (பன்மை வெளியீடு) என்னும் விரிவான நூலும் ‘பாடநூல்களில் வெறுப்பு அரசியல்’ (இலக்கியச் சோலை வெளியீடு) என்கிற குறுநூலும் வெளிப்படுத்துகின்றன.
கல்வித்துறை முழுவதும் காவிமயமாகிவிட்டது. இவர்களது போலித் திராவிட அரசியலின் முகம் கோரமானது.
மு.சிவகுருநாதன்
திருவாரூர்
ஒன்றை நாம் நினைவில் கொண்டு வர வேண்டும். கடந்த கால அரசை மூச்சுக்கு முன்னுரு தரம் இன்றைய முதல்வர் அவர்கள் அடிமை அரசு என அழைத்தார்.
ஆனால் காலம் இன்று எப்படி செயல்படுகிறது.
காவல் துறை கிட்டதிட்ட காவி மயமாகிவிட்டதை கள்ளகுறிச்சி சம்பவம் உணர்த்தியது.
இன்று கல்வி துறையும் காவி துறையாக அடிகோல் நாட்ட பட்டு விட்டது.
இந்த அரசை ஓட்டு போடு தேர்ந்து எடுத்தது தமிழக மக்கள் தானே தவிர நாக்பூர் வகையற அல்ல.
இதை நம் அரசு உணரும் காலம் எப்போது???
அரசும் அரசாளும் மந்திரிகளும் திரவிட கட்சிகளின் ஆட்கள். ஆனால் அவர்கள் வேலை செய்வது என்னவோ நாக்பூர் வகையறாவுக்கே!!!
தமிழகத்தில் காவி வந்துவிடும் என ஒட்டு கேட்டு ஆட்சியையும் பிடித்து, கடைசியில் நிர்வாகத்தை காவி மாயமாகிவிடும் போல!!!
disgusting
“மக்களே போல்வர் கயவர்” என்பதைப் போலுள்ள மனித குல எதிரிகளை இனம் காண்பதிலேயே நல்லோர் வாழ்நாள் கரைந்துவிடுகிறது. இதுபோன்ற கட்டுரைகளை படித்தாவது ஆட்சியாளர்கள் கூர்மையுடன் செயல்பட்டு தமிழ்நாட்டை காக்க வேண்டும்.
சலுான் குப்பையை நோண்டினால் மசுரு தான் இருக்கும்.
அறிவுஜிவிகள் எல்லோரும் ஏதோ ஒரு சித்தாந்தத்தை அடிப்படையாகத் தான் கொண்டு இருப்பார். 1960களின் பிற்பகுதியில் தமிழ் ஆசிரியர்கள் பலர் திக கொள்கை பிடிப்போடு இருந்தார்கள். தமிழகத்தின் பிரபல கல்வி திட்டமான அறிவொளி இயக்கம் முழுவதும் இடதுசாரிகள் வசம் தான் இருந்தது. அதே போல தான் தற்போது கல்வி தொலைக்காட்சியிலும் நடந்துள்ளது.
இந்த ஆட்சியில் ஆர்எஸ்எஸ் காரன் என்று சொன்னால் தீவிர வாதி போல அடையாளப்படுத்தப்படுகிறார். ஆனால் இனி அந்த கதை நடக்காது. அதற்கு மற்றவர்கள் சாயம் வெளுக்க தொடங்கிவிட்டது தான் காரணம்.
திராவிட கொள்கைகளுக்கு நேர்மாறானது ஆர்எஸ்எஸ் கொள்கைகள். சமத்துவம், சம வாய்ப்பு என்பது திராவிட கொள்கை. ஜாதி படிமுறைகளை ஏற்றுக் கொண்டது ஆர்எஸ்எஸ். அண்மையில் புதிய குடியரசுத் தலைவர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக பார்ப்பனர்களைக் கொண்டு தீட்டு கழித்த சடங்கைப் பார்த்தோமே! கடந்த குடியரசுத் தலைவரைக் கூட கோயிலுக்குள் அனுமதிக்காமல் அவர் வெளியே நடைபாதையில் அமர்ந்து விட்டு வந்ததைக் கூட பார்த்தோமே! மனிதர்கள் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டுக்கும், நாங்கள்தான் மேல் ஜாதி என்று மற்ற மனிதர்களை இழிவு படுத்திய காலம் மீண்டும் வந்து விடக் கூடாது என்பதாலேயே இந்த எதிர்ப்பு தோன்றுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் சமத்துவம் படிப்படியாக உருவாகி வரும் காலத்தில், அந்த கொள்கை வழி வந்த திமுக அரசு இப்படி ஒருவரை நியமிக்கும் போது எதிர்ப்பு வருவது இயல்பானதுதான்.
I couldn’t resist commenting