அனேகமாக பாஜகவின் தோல்வியை தெளிவாக உணர முடிகிறது. ஜனநாயகத்தின் தீர்ப்பை ஏற்று ஆட்சி மாற்றம் அமைதியாய்  ஏற்படுமா? முதுகெலும்பில்லா தேர்தல் கமிஷன் EVM மெஷின், வாக்கு எண்ணிக்கை போன்றவற்றில் நியாயம் காட்டுமா? என்ன மாதிரியான குறுக்கு வழிகளை திட்டமிட்டுள்ளனர்..? ஒரு அலசல்; தன்னை அதிகாரமிக்க, இன்றியமையாத நபராகக் காட்டிக் கொள்ளும், ஒரு சண்டைக்காரனைப் போன்ற அரசியல் தோற்றம் தரும் மோடி, அமைதி வழியில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்குத் தடையாக இருப்பார் என்கிற ஐயம் பலரிடமும் எழுந்துள்ளது. போட்டி தொடங்கும் முன்னரே, தனது அரசியல் எதிரிகளை, பந்தயத்திலிருந்து ...

அகத்திக் கீரை பயன்பாடு குறைவதால் அனாவசிய நோய்கள் உருவாகின்றன! அகத்திக் கீரையை பல வகைகளில் சமைக்கலாம். இது அகத்தை தூய்மையாக்கி, முகத்தை பொலிவாக்கும். மாத்திரை, மருந்து, மது  உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை தீர்க்கும். மருத்துவ செலவுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்; அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே’ என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது. அகத்தியை வெற்றிலைக் கொடிக் கால்களில் ஊன்று கால்களாக வளர்ப்பர். அகத்தியர் நிழலில் மூலிகை கொடிகள் நன்கு வளரும் என்பது நம்பிக்கை! அகத்தி என்பது அகத்தியருடன் தொடர்புடையது ...

அதிமுக, திமுக என்ற இரண்டு ஆட்சிகளிலும் தொடர்ந்து தமிழகத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன! இதற்கு சர்வ கட்சி ஒத்துழைப்பும் உள்ளது. திருடப்படும் திருப்பூர் மாவட்ட இயற்கை வளங்கள் குறித்தும், கொள்ளை போகும் கோவை மாவட்ட இயற்கை வளங்கள் குறித்தும் பார்ப்போம்; மலைகள் தான் மனித சமூகத்திற்கு மகத்தான கொடைகளை வழங்கி வருகின்றன! நாம் குடிக்கும் தண்ணீர், விவசாயத்திற்கான பாசனத் தண்ணீர், தூய்மையான காற்று, பல்லுயிர் பெருக்கம், அரிய மரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள்..என எத்தனையோ விலைமதிப்பில்லா பயன்கள்! ஆனால், கேவலம் கரன்சி நோட்டுகளுக்காக ...

ஊழல் குற்றச் சாட்டில் ஒழித்து விட முடியாத அரவிந்த் கெஜ்ரிவாலை அவர் கட்சி பெண் எம்.பியை புகார் தர வைத்து, நற்பெயரை கெடுக்க நினைக்கிறதா பாஜக? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டுள்ள அனுதாபத்தை சிதைக்கவா? ஸ்வாதிமாலிவால் என்பவர் யார்? உண்மையில் அவர் தாக்கப்பட்டாரா..? நடந்தது என்ன..? அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அக் கட்சியின் பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் முதல்வரின் தனிச் செயலாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. ”இது பாஜகவின் சதி” என்கிறது ஆம் ஆத்மி! சம்பவம் நடந்து ...

வீராணம் ஏரி, கடலூர் மாவட்ட காவேரி டெல்டா விவசாயிகளின் கருவூலமாகும். சென்னைக்கு தண்ணீர் தரும் தாய்மடியாகும். கடல் போல காட்சியளிக்கும் இந்த ஏரி, இன்றைக்கு  தண்ணீர் இன்றி, வறண்டு கிடக்கிறது! மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் நீர் ஆதாரம் நிர்மூலம் ஆனதற்கான காரணங்கள் என்ன? வீராணம் ஏரி என்பது தென்னாற்காடு மாவட்டத்தின் பிரதான நீர் ஆதாரமாகும். கடலூர் மாவட்டத்தில் நாட்டார் மங்களத்தில்  உள்ள வீராணம் ஏரி,  காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார் கோவில், சிதம்பரம், புவனகிரி, சேத்தியாதோப்பு பகுதிகளில் உள்ள பல லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்த இடைக்கால ஜாமீன் ஹேமந்த் சோரனுக்கு கிடைக்கவில்லை. தலை நகர் டெல்லி முதல்வருக்கு கிடைத்த நியாயம் ஜார்கண்டின் பழங்குடித் தலைவருக்கு மறுக்கப்படுகிறது! இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறையை அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்; நில மோசடியில்  தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகத்தால் தான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஹேமந்த் சோரன், ஜனவரி 31 அன்று கைது செய்யப்பட்டார். உடனே அதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றம் சென்றார். உச்ச நீதிமன்றம் அவரை ஜார்க்கண்ட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தை அணுகச்  ...

வாழும் இடத்தையும், உடமைகளையும் துறந்து இழப்பதற்கு ஏதுமற்று, அகதிகளாக வாழும் பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ள காசா மீது கணக்கற்ற குண்டுமழை பொழிந்த வண்ணமுள்ளது இஸ்ரேல்! 35,000க்கும் மேற்பட்ட மக்களை கொன்ற பிறகும், அவர்களின் கொலைவெறியை யாராலும் தடுக்க முடியவில்லையே, ஏன்? தற்போது காசா பகுதியின் தென் கோடியில் உள்ள நகரமான ரஃபா விற்குள் இஸ்ரேலிய ராணுவம் நுழைந்து, அங்குள்ள அப்பாவி மக்களை வலுக்கட்டாயமாக விரட்டி அடிக்கிறது! போக்கிடம் ஏதுமின்றி மூட்டை முடிச்சுகளுடன் லட்சக்கணக்கான பாலத்தீனிய மக்கள் நகரத்தை விட்டு வெளியேறுகின்றனர். கடந்த அக்டோபர் 7 ல் ...

மாநகரமயமாக்கல், சாலை விரிவாக்கம், புதிய மேம்பாலங்கள் கட்டுதல்.. என்ற வகையில் சமீபகாலமாக தமிழகத்தில் சாலை இருபுறமும் இருந்த மரங்கள் பல்லாயிரக்கணக்கில் வெட்டப்பட்டு வருவதையும், இது தமிழக சுற்றுச் சூழலில் எப்படி மிக பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் பார்ப்போம்; இந்தியாவிலேயே நகரமயமாக்கலை மிக துரிதமாக செய்து வரும் மாநிலம் தமிழகம். பல சிறு நகரங்கள் மாநகரங்களாகி வருகின்றன. இதன் விளைவால் வரலாறு காணாத வகையில், சிறு நகரங்களை சுற்றி இருந்த கிராமங்கள், அவற்றின் நீர் நிலைகள், வயல்வெளிகள் ஆகியவை முழுங்கப்பட்டு வருகின்றன. இத்துடன் பன் ...

தங்கத்தை விட மதிப்பு மிக்கது கிராம்பு! அதன் பின்னே இருக்கும் நெடிய  வரலாறும், மருத்துவ குணங்களும் பிரமிக்கதக்கவை! பழந்தமிழர் தமிழர் காலந்தொட்டு பயன்படும் மூலிகை!  இது ஆரோக்கிய வாழ்க்கைக்கு இன்றியமையாதது! இது சமையலுக்கு மட்டுமல்ல, பலவிதமான நோய்களை தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி!  கிராம்பைத் தெரியாதவர் உண்டோ ? இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரம் எனக் கூறப்படுகிறது எனினும், பெருவாரியாக இந்தியாவிலும், இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளம், வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது. கிராம்பு ஒரு நறுமண மூலிகையாகும். சமையல்களில் சுவை சேர்க்கவும் ...