நேர்மை, நிர்வாகத் திறன், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் காட்டும் அக்கரை ஆகியவற்றின் அம்சமாக பார்க்கப்பட்டவர் கெஜ்ரிவால்! சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசிலை விரும்பாதவர்! ஆனால், சமீப காலமாக இந்துத்துவர்களையே மிரள வைக்கும் மத அரசியலுக்கு மாறி வருகிறார்! இதன் பின்னணி என்ன? மாற்று அரசியலுக்கு உதாரணமாகவும், ஊழற்ற நிர்வாகத்திற்கு முன் மாதிரியாகவும் பேசப்பட்டு வருபவர் அரவிந்த் கேஜ்ரிவால்! ஆனால், சமீப காலமாக இந்துத்துவ அரசியலில் பாஜகவின் போட்டியாளராக தன்னை அடையாளம் காட்டி வருகிறார்! பாஜகவையே அதிர வைக்கும் வகையில், ‘இந்துத்துவ ஸ்டண்ட்’ அடிக்கிறார். ...