பெரும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025 அதிர்ச்சியளிக்கிறது. இத்தனை சொதப்பல்களா? இருக்கக் கூடாத அம்சங்கள் இத்தனையா? இது எப்படியெல்லாம் தேசிய கல்விக் கொள்கைக்கு பல விதங்களிலும் ஒத்திசைவாக உள்ளது என்பதை விவரிக்கிறார் கல்வியாளர் ஜவகர் நேசன்; தமிழ்நாடு மாநிலக் கல்வி கொள்கை பள்ளிக் கல்வியை மட்டும் கணக்கில் கொண்டதாக வெளியாகியிருக்கிறது. அதுவும் முழுமையானதாக இல்லை. பகுதி பகுதியாக இருக்கிறது. உள்ளடக்கத்திலும், கட்டமைப்பிலும் மிகக் குறைந்த தரத்தோடு ஒரு கொள்கை அறிக்கை வெளியாவது, இதுவே முதன் முறை. பொதுக் கொள்கைக்குரிய ...
அறிவியல் பூர்வமான கல்வியை காலி செய்து, புராண, இதிகாசம் சார்ந்த கல்வியை திணிப்பதாக தேசியக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது. எல்.கேஜி தொடங்கி எம்.பி.பி.எஸ், ஐ.ஏ.எஸ் வரை அனைத்து நிலை பாடத் திட்டத்தையும் பார்ப்பனிய, சனாதனக் கண்ணோட்டத்தில் மாற்றியுள்ளனர். விரிவான அதிர்ச்சி ரிப்போர்ட்! சின்னஞ்சிறு குழந்தையின் கல்வி முதல் மிகவுயர்ந்த ஆய்வுகள் வரை அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு போகின்றனர். இதில் “தேசிய அடித்தள நிலைக்கான பாடத்திட்டக் கட்டமைப்பு” அவற்றின் முதல் இரு முக்கிய அத்தியாயங்கள் குறித்து ஆய்வு செய்வதே ...
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமது கல்விச் சூழல் பேராபத்தில் உள்ளது! எளிய மக்களை கல்விப் புலத்திலிருந்து அப்புறப்படுத்தும் சூழ்ச்சியாக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு, சத்தமில்லாமல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆபத்தை தடுக்கும் விதமான AISEC- யின் கருத்தரங்கில் அனல் பறந்தது. ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பிறந்த தினத்தை ஒட்டி செப்டம்பர் 25 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் கணிசமான கல்வியாளர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பலதரப்பட்ட சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு எழுச்சியுடன் பேசினர். அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் ...













