எதிர்கட்சிகள் ஒன்றிணைய அடித்தளமிட்டவரான நிதிஸ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதை தனித்து முடிவெடுத்தார் என்றாலும், அந்த முடிவுக்கான சூழல்கள் அங்கு இருந்தன. அதற்கு காங்கிரஸ் பிள்ளையார் சுழி போட்டது ஏன்..? பாஜகவை வீழ்த்துவதில் ஒரு முன் களவீரனாக காங்கிரஸ் இருக்கிறதா..? ஊசலாட்ட மனநிலை கொண்டவர் தான் நிதிஸ்குமார்! ஆயினும், பாஜகவின் பாசிசத்தால் பாதிக்கப்பட்டு ஒரு மாற்று அவசியம் தேவை என அவர் தான் முதன்முதலாக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க ஆர்வம் காட்டினார்! அவர் முயற்சியில் தான் பல மாநில கட்சிகள் இந்த அணியில் சேர்ந்தனர்! ஆனால், ...

எதிர்பார்க்கப்பட்டது தான்!  கூடா நட்பு கேடாய் ஆனது. ஓடாய் தேய்ந்தது நிதிஸ் கட்சி! ஜனதா தளத்தின் அடையாளத்தையே அழித்து , பாஜக செய்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்னும் தொடர்ந்தால், ‘இருப்பதையும் இழப்போம்’ என்ற நிலைக்கு தள்ளப்பட்டார் நிதீஸ்.  என்னவெல்லாம் நடந்தன பீகாரில்? உரிமையை இழந்தவராய், மெள்ள,மெள்ள ஒடுக்கப்பட்டவராய் பெயருக்கு முதல்வர் பதவி வகித்தார் நிதீஸ். பீகாரில் நடந்தவை என்ன? பாஜக நிதிஸூக்கு தந்த தொல்லைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம். பாஜகவை விட்டு விலகி வந்த ஐக்கிய ஜனதா தளத்திற்கு ராஷ்டிரிய ...