ஒரு நாடு உண்மையில் நாகரீகச் சிறப்புடன் இருக்கிறதா என்பதை அறிய அந்த நாட்டில் நூலகங்கள் எந்த லட்சணத்தில் இயங்குகின்றன என்பதே அளவுகோலாகும். தமிழ் நாட்டில் நூலகத்துறை கந்தல் கோலத்தில் கதியற்று கிடப்பதன் பின்னணி என்ன? பொது நூலகச் சட்டத்திலும் விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ள உயர் மட்டக் குழுவை ஒன்றை முன்னாள் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன் தலைமையில் அமைத்துள்ளது தமிழக அரசு! பொது நூலகச் சட்டம்-1948 இயற்றப்பட்டு 70 ஆண்டுகளைக் கடந்த நிலையில், இன்றைய நவீனத் தகவல் தொழில்நுட்ப யுகத்தின் தேவைகளுக்கேற்பப் பொது நூலகங்களின் நடைமுறைகளைச் சீர்திருத்த ...