”நான்கே வருஷத்தில் நட்டாற்றில் விடுகிறீர்களே” என ஒருதரப்பும், ”நாலு வருஷத்தில் நல்ல பணம் கிடைக்குது” என மறுதரப்புமாக அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் சம விகிதத்தில் இருக்கிறது! உண்மை என்ன? இந்திய ராணுவம் குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்! ”பதினெழரை வயசுல சேரணும், 21 வயசுல வெளியேறிடணும்” என முதலில் அறிவித்தார்கள்! இதற்கு எதிர்ப்பு வலுத்தவுடன், ”18,19 வயதிலும் சேரலாம்,23 வயது வரை இருக்கலாம்.” என மாற்றியுள்ளனர். இந்த ஒரு சம்பவமே முறையான திட்டமிடல் இன்றி, அவசர கதியில் இந்த திட்டத்தை கொண்டு வந்ததை ...

ஒரு நாடு உண்மையில் நாகரீகச் சிறப்புடன் இருக்கிறதா என்பதை அறிய அந்த நாட்டில் நூலகங்கள் எந்த லட்சணத்தில் இயங்குகின்றன என்பதே அளவுகோலாகும். தமிழ் நாட்டில் நூலகத்துறை கந்தல் கோலத்தில் கதியற்று கிடப்பதன் பின்னணி என்ன? பொது நூலகச் சட்டத்திலும் விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ள உயர் மட்டக் குழுவை ஒன்றை முன்னாள் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன் தலைமையில் அமைத்துள்ளது தமிழக அரசு!  பொது நூலகச் சட்டம்-1948 இயற்றப்பட்டு 70 ஆண்டுகளைக் கடந்த நிலையில், இன்றைய நவீனத் தகவல் தொழில்நுட்ப யுகத்தின் தேவைகளுக்கேற்பப் பொது நூலகங்களின் நடைமுறைகளைச் சீர்திருத்த ...

பொங்கல் தொகுப்பான 21 வகை உணவுப் பொருட்கள் விவகாரத்தில் இவ்வளவு கெட்ட பெயர்கள் ஏற்படுவதற்கு என்ன காரணம்? மூன்று துறைகள் சம்பந்தப்பட்ட செக்கிங் ஆபீசர்ஸ் விங் இருந்தும் தரக்குறைவு, எடை குறைவு, பற்றாகுறை ஆகியவை ஏற்பட்டதன் பின்னணி என்ன? ரேஷன் உணவு பொருட்கள் சப்ளை விவகாரத்தில் குற்றம், குறைகள் இருந்தால் அது எவ்வளவு சென்சிடிவ்வான விளைவுகளை உருவாக்கும். சேர்த்து வைத்த நல்ல பெயர் அனைத்தையும் நிமிடத்தில் தரைமட்டமாக்கிவிடும் என்பது தெரியாமல் இதில் சிலர் விளையாடியுள்ளனர். அதை தடுக்க நினைத்தும் முடியாமல் பலரும் கைகட்டி, வாய் ...