பதின்பருவத்தினர் எளிதில் உணர்ச்சிவசப் படுகின்றனர். தவறான ரோல் மாடல்களை  பின்பற்று கின்றனர். உடல் உழைப்பை குறித்தோ, கடமைகள் குறித்தோ அறியாதவர்களாக வளர்கின்றனர். இவர்களிடம் சுமூகமான உறவைக் கட்டமைப்பதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூகமும் என்ன செய்யலாம்? தினச் செய்திகளில் குறைந்தது 2 செய்திகளாவது வன்முறை, தற்கொலை முயற்சி, திருட்டு, போதை பழக்கம் போன்ற பல குற்றங்களில் மாணவ/மாணவிகள் ஈடுபடும் செய்திகளை பார்க்க முடிகிறது. முக்கியமாக இவர்கள் அனைவருமே வளரிளம் பருவ வயதினராக இருக்கின்றனர். பொதுவாக நாம் எல்லாருமே குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.பிறகு வளர்ந்துவிட்ட பெரியவர்களூக்கு முக்கியத்துவம் ...