மூளைக்குள் சுற்றுலா பெயருக்கேற்ப நம்மை ஒரு நீண்ட நெடிய பயனுள்ள அறிவார்ந்த ஒரு பயணத்திற்குள் இந்தப் புத்தகம் இட்டுச் செல்கின்றது. வெ இறையன்பு எழுதியிருக்கும் இந்த புத்தகம் 626 பக்கங்கள் கொண்டது.  இந்த புத்தகத்தில் உள்ள தகவல் களஞ்சியங்கள் நம்மை பிரமிக்க வைக்காமல் இல்லை. மூளையைப் பற்றிய விரிவான பல கதைகள் நிரம்பிய சுவாரஸ்யமான என்சைக்ளோபீடியா என்றுக் கூறலாம். கிட்டதட்ட மூளை சம்மந்தமாக எதையுமே விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆசிரியர் பரந்து விரிந்து தகவல்களை சேகரித்துள்ளார் என்பது தெரிகிறது. இதற்காக அவர் பல மருத்துவர்கள் ...

‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற இந்த நூல் வாழ்க்கையின் சகல கூறுகளையும் அலசுகிறது! இறையன்புவின் பரந்துபட்ட ஆழமான வாசிப்பு அனுபவங்களும், வாழ்வியல் பார்வைகளும் கைகோர்த்து நூலுக்கு அணி சேர்க்கின்றன! ஏராளமான புகைப்படங்கள், ஓவியங்கள் வண்ணத்துடன் அழகுற, தகுந்த இடங்களில் சேர்க்கப்பட்டு இருப்பது நூலுக்கு பொலிவைத் தருகின்றன! ‘இலக்கியங்கள் நடைமுறை சார்ந்த வாழ்க்கைக்கு தேவையில்லை’ என்ற அறியாமையை சுக்கு நூறாக்கிவிடுகிறது இந்த நூல்! ‘இலக்கியத்தின் வழியே நம் சிந்தனைகளையும்,செயல்பட்டையும், வாழ்க்கை குறித்த தெளிவையும் பெற முடியும்’ என்பதை ஆதாரபூர்வமாகச் சொல்லி வியக்க வைக்கிறார் ஆசிரியர்! சுமார் 600 ...