பேசுவது ஆன்மீகம், செய்வதெல்லாம் பித்தலாட்டம் என்பதற்கான ஒரு சம்பவமே இது! ஆரம்பகாலத்தில் துக்ளக்கில் ஆடிட்டர் குருமூர்த்தி தன் மனைவியை ஒரு பங்குதாராக ஆக்கியிருந்தார். அதனால்,அவர் கணக்கு,வழக்குகள் பார்ப்பதற்கென்று ஒரு அக்கவுண்ட் மேனேஜரை சோவுக்கு பரிந்துரைத்தார். அவர் பெயர் சீனிவாசன்.,குள்ளமாக இருப்பார். துக்ளக் அலுவலகத்தில் அவருக்கென்று ஒரு தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது! துக்ளக் இதழ் விற்பனை,விளம்பர வருவாய் அனைத்தையும் அவர் தான் கவனித்தார்.அப்போது துக்ளக் அலுவலகம் மயிலாப்பூர் சிஐடி நகரில் இருந்தது. அவர் சர்வ அதிகாரங்களுடன் சுதந்திரமாக செயல்பட்டார்.அவரை சந்திக்க ஆர்.எஸ்.எஸ் ஆட்களெல்லாம் அலுவலகத்திற்கு வருவார்கள். ...