தமிழ் நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா? எளியோரிடம் இரக்கம் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த எடுக்கப்பட்ட ஒரு சினிமா படத்தை முன்வைத்து பலவித கலவரச் சூழல்கள் உருவாக்கப்படுவதும், ”உதைப்பேன், கையை வெட்டுவேன்” என்ற வன்முறை பேச்சுகள் அரங்கேறுவதும், தியேட்டர்களில் படம் பாதியில் நிறுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்படுவதும், சூரியாவின் பேனர்கள் கிழித்து எரிக்கப்படுவதும்… நடந்து கொண்டே இருக்கின்றன! இதை இன்னும் எவ்வளவு நாள் வேடிக்கை பார்க்கப் போகிறது அரசாங்கம்? வன்முறை வளர்ந்து நடக்கக் கூடாத ஒன்று நடந்த பிறகு தான் அரசாங்கம் விழித்துக் கொள்ளுமா? ...