சிறைக் கொடுமைகள் குறித்தும், அதில் ஒரு நிரபராதி கடுமையாகத் தண்டிக்கப்படுவது குறித்தும் எடுக்கப்பட்டு அமெரிக்காவில் சக்கை போடுபோட்ட படம் தான் ‘The Shawshank Redemption’. ‘ஜெய்பீம்’ படத்திற்கும் முன்பாக IMDb ரேட்டிங்கில் உலக அளவில் முன்னணியில் இருந்தது இது தான்! Shawshank என்பது அமெரிக்காவில் உள்ள சிறைச்சாலையைக் குறிக்கும். Redemption என்பதற்கு விமோசனம் என்பது பொருளாகும்.இது ‘ஜெய் பீம்’ போலவே காவல் சித்திரவதையை ரத்தமும், சதையுமாக சொல்லும் ஒரு படம். இதை ஜெய்பீம்மின் முன்னோடி படம் என்றும் சொல்லலாம்! பொதுவாக இதுபோன்ற திரைப்படங்களுக்கு பெரிய ...
க.அமுதன், சுசீந்திரம், கன்னியாகுமரி ”அதிமுக அரசின் ஊழல்களை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறாரே.? இதற்கெல்லாம் புளகாங்கிதப்படும் மனநிலையை மக்கள் கடந்துவிட்டனர். சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்புகள் எப்போது இடிந்துவிழுமோ என்ற நிலையில் சென்ற ஆட்சியாளர்களால் கட்டப்பட்டு உள்ளது. தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்துவிழுந்ததை யாவரும்பார்த்தோம். அண்ணா பல்கலை கழகம் மற்றும் ஐ.ஐ.டி நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தந்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றார்கள். என்ன ஆச்சு? அவர்கள் தந்த விசாரணை அறிக்கையே வெளியிடபடாமல் ...
தமிழ் நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறதா? எளியோரிடம் இரக்கம் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த எடுக்கப்பட்ட ஒரு சினிமா படத்தை முன்வைத்து பலவித கலவரச் சூழல்கள் உருவாக்கப்படுவதும், ”உதைப்பேன், கையை வெட்டுவேன்” என்ற வன்முறை பேச்சுகள் அரங்கேறுவதும், தியேட்டர்களில் படம் பாதியில் நிறுத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்படுவதும், சூரியாவின் பேனர்கள் கிழித்து எரிக்கப்படுவதும்… நடந்து கொண்டே இருக்கின்றன! இதை இன்னும் எவ்வளவு நாள் வேடிக்கை பார்க்கப் போகிறது அரசாங்கம்? வன்முறை வளர்ந்து நடக்கக் கூடாத ஒன்று நடந்த பிறகு தான் அரசாங்கம் விழித்துக் கொள்ளுமா? ...
பழங்குடி மக்கள் அதிகார மையத்தால் அனுபவிக்கும் சொல்லப்படாத வலிகளை சொல்லும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் ஒரு புறம் மக்களின் பேராதரவை பெற்றுள்ள நிலையில், மற்றொரு புறம் மதவாத, சாதிய அரசியல் செய்து வருபவர்களின் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த விமர்சனங்களுக்கான பதில்கள் படத்திற்குள்ளேயே இருக்கிறது என்ற வகையில் அமைதியாக கடந்து சென்றார் சூர்யா! ஆனால், அன்புமணி ராமதாஸ் மிக சூடாகி சூர்யாவிற்கு சில கேள்விகளை பொதுவெளியில் எழுப்பி ‘கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்’ என்றார். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் ...
எம்.ஆதித்யா, பனைமரத்துப்பட்டி, சேலம் ”ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே இடைத்தரகர் சூசேன்குப்தாவிற்கு ரூ65 கோடி தரப்பட்டுள்ளது பற்றி ராகுல் பதில் சொல்ல வேண்டும்” என்கிறதே பாஜக? இதைக் கண்டுபிடிக்க ஏழு ஆண்டுகளா..? இதைத் தெரிந்து கொள்ளாமல் தான் ஒப்பந்தம் போடப்பட்டு 36 விமானங்கள் வாங்கபட்டதா? இந்த அளவுக்குத் தான் நிர்வாகத் திறமையா..? தவறு நடந்திருக்கிறதென்றால், தண்டிக்க வேண்டியவர்களே நீங்கள் தானே? சம்பந்தப்பட்டவர்களை எப்போது உள்ளே தள்ளப் போகிறார்கள் மோடியும், அமித்ஷாவும்! விவகாரத்தை திசை திருப்பாமல் பதில் சொல்லட்டும். காங்கிரஸ் ஆட்சியில் ...
எஸ்.வேதவள்ளி, பூந்தமல்லி இடைத் தேர்தலில் கிடைத்த உதையால் பாஜக அரசு பெட்ரோல் வரியை குறைத்துவிட்டு மற்ற கட்சிகள் ஆளும் மாநில அரசுகளையும் குறைக்க சொல்லி உள்ளதே? ஆனைக்கு விழுந்த அடியை பூனைகளும் பகிர்ந்து கொள்ள வேண்டுமாம்! சரி தான்! இந்த பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தின் பின்னுள்ள உண்மையான திமிங்கலம் ரிலையன்ஸ் தான். இன்றைக்கு பெட்ரோலிய நிறுவனங்களின் சரிபாதி உற்பத்தி அம்பானி கைகளில் தான் உள்ளது. அவர் தான் விலையேற்றத்தின் முழு காரணகர்த்தா! அந்த திமிங்கலத்திற்கு மக்களையே தீனியாக்கி ஆள்பவர்கள் தான் மத்திய ஆட்சியாளர்கள்! க.முருகானந்தம், காஞ்சீபுரம் ...
படம் பார்த்த பிறகு அரைமணி நேரம் ஆகியது, அதன் தாக்கத்திலிருந்து விடுபட்டு மனம் சகஜ நிலைக்கு திரும்ப! பலருக்கும் இந்த அனுபவம் வாய்த்திருக்கும் என்றே நினைக்கிறேன். அந்த அளவுக்கு ரியலிஸ்டிக்காகவும், மையக் கதையில் இருந்து திசை மாறாமலும் ஜெய்பீம் எடுக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகளை நம்மில் ஒருவராக மதிக்காமல் புறம் தள்ளி வந்துள்ள இந்த சமூகத்தின் இயல்பை காட்சிபடுத்தி இருப்பதன் மூலம் சமூக மனசாட்சியை தட்டி உலுக்குகிறது படம்! படத்தின் உண்மையான ஹீரோ கதைக்கரு தான்! அதற்கு அடுத்த முக்கிய கதாபாத்திரம் கதாநாயகி செங்கேணி தான்! அவள் ...
உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டாலும் ஆவணப்படமாகவோ, மிகைப்படுத்தியோ, பிரச்சார தொனியோ இல்லாமல் திரைப்படம் முழுவதும் ஒரு திரில்லர் படம் பார்ப்பது போன்ற உணர்வு நமக்குள் எழும் வண்ணம் காட்சி அமைப்புகள் உள்ளன! சொல்லப்படாத பழங்குடியினர் வாழ்க்கை போராட்டத்தை, உலுக்கி எடுக்கும் வகையில், மிக உயிர்ப்புடன், உலகத் தரத்தில் விவரிக்கிறது ஜெய்பீம்! உண்மையில் இந்த திரைப்படம் சினிமாத் தனம் இல்லாத ஒரு சினிமா என்று தான் சொல்ல வேண்டும். சிறிது கூட தொய்வு இல்லாமல் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை படத்தை நகர்த்தியிருக்கும் பாங்கு மிக ...