படம் பார்த்த பிறகு அரைமணி நேரம் ஆகியது, அதன் தாக்கத்திலிருந்து விடுபட்டு மனம் சகஜ நிலைக்கு திரும்ப! பலருக்கும் இந்த அனுபவம் வாய்த்திருக்கும் என்றே நினைக்கிறேன். அந்த அளவுக்கு ரியலிஸ்டிக்காகவும், மையக் கதையில் இருந்து திசை மாறாமலும் ஜெய்பீம் எடுக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகளை நம்மில் ஒருவராக மதிக்காமல் புறம் தள்ளி வந்துள்ள இந்த சமூகத்தின் இயல்பை காட்சிபடுத்தி இருப்பதன் மூலம் சமூக மனசாட்சியை தட்டி உலுக்குகிறது படம்! படத்தின் உண்மையான ஹீரோ கதைக்கரு தான்! அதற்கு அடுத்த முக்கிய கதாபாத்திரம் கதாநாயகி செங்கேணி தான்! அவள் ...

உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டாலும் ஆவணப்படமாகவோ, மிகைப்படுத்தியோ, பிரச்சார தொனியோ இல்லாமல்  திரைப்படம் முழுவதும் ஒரு திரில்லர் படம் பார்ப்பது போன்ற  உணர்வு நமக்குள் எழும் வண்ணம் காட்சி அமைப்புகள் உள்ளன! சொல்லப்படாத பழங்குடியினர் வாழ்க்கை போராட்டத்தை, உலுக்கி எடுக்கும் வகையில், மிக உயிர்ப்புடன், உலகத் தரத்தில் விவரிக்கிறது ஜெய்பீம்! உண்மையில் இந்த திரைப்படம் சினிமாத் தனம் இல்லாத ஒரு சினிமா என்று தான் சொல்ல வேண்டும். சிறிது கூட தொய்வு இல்லாமல் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை படத்தை நகர்த்தியிருக்கும் பாங்கு மிக ...

 சமீபகாலமாக காடுகளும்,பழங்குடிகளும் அங்கு அத்துமீறி ஊடுருவிய நகரவாழ்மக்களால் சுரண்டப்படுகின்ற அவலத்தையும்,அங்குள்ள வளங்கள் சூறையாடப்பட்டு,அவர்கள் நகரமக்களின் வாழ்வியல் தேவைக்கேற்ப ஆட்டிவைக்கப்படுவதுமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆண்டுகளாக காடுகளில் சுற்றி அலைந்து,பழங்குடிகளின் வாழ்க்கை பிரச்சினைகளை எழுதி வரும் பத்திரிகையாளர் சிவ சுப்பிரமணியன் அறம் இதழுக்காக ஜா.செழியனுக்கு தந்த நேர்காணல். அடிப்படையில் இந்த பூமி காடு,மலைகள் சூழ்ந்ததாகவே இருந்தது. காட்டைப் பண்படுத்தி விவசாய பூமியாக்கினான் மனிதன். காலப்போக்கில் காடு,மலையை விட்டு மனிதன் விலகி வந்து தனக்கான வாழும் பகுதியை  உருவாக்கி  கொண்டான். அவற்றை நகரம் என்றழைக்கிறோம் . அங்கு வாழ்பவன் அறிவு ...