சர்வாதிகார ஆட்சியாளர்களின் கண்களுக்கு கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் சதிகாரராகத் தான் தெரிந்தார்! அவருக்கு நஞ்சை கொடுத்து கொன்றனர். ஆனால்,சாக்ரடீஸின் தத்துவங்கள் சாகாவரம் பெற்றுவிட்டன! அதே போல இன்று பாஜக அரசின் கண்களுக்கு மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், சிந்தனையாளர்களும்,வழக்கறிஞர்களும்  தண்டிக்கப்பட வேண்டிய நக்சலைட்டுகள்! இவர்களை சிறையில் தள்ள இந்த ஒற்றை குற்றச்சாட்டு போதுமானதாகிவிடுகிறது! இந்தியா முழுவதும், காஷ்மீரிலிருந்து தமிழ்நாடு வரை,  பேராசிரியரில் இருந்து  மாணவர் வரை, கவிஞர் முதல் சமயத் துறவி வரை என கடந்த இரண்டு ஆண்டுகளில், பயங்கரவாத தடை ...