என்னவென்று யூகிக்கமுடியாத காய் நகர்த்தல்கள் பீகார் அரசியலில் அரங்கேறிக் கொண்டுள்ளது! கூட இருந்தே முதுகில் குத்தியதோடு, தங்களுக்கு குழியும் பறிக்கிறது பாஜக என்பதை முன்னெப்போதையும் விட, தற்போது மிக ஆழமாக உணரத் தொடங்கியுள்ளது ஜனதாதளம்! அருணாச்சல பிரதேசத்திலும் பாஜக – ஜனதாதளம் கூட்டணி கண்டுள்ளன! அங்கு ஜனதாதளம் ஆதரவுடன் தான் பாஜக ஆட்சி செய்கிறது! அதில் அதிகாரத்தில் பங்கு கேட்ட ஜனதாதள எம்.எல்.ஏக்களை தங்கள் கட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவி என ஆசை காட்டி கட்சி மாற வைத்துள்ளது பாஜக! இது தேசிய அளவில் ...