உள் நாட்டு தேசபக்த குழுக்களிடையே ஒற்றுமை இல்லாததே அன்றும், இன்றுமாக ஆப்கானில் தொடர்ந்து அந்நியத் தலையீடுகளுக்கு வழிவகுக்கிறது…! பல்லாண்டு காலம் தனக்கு அரசியல் கூட்டாளியாக இருந்த தாலிபான்களை, நெஞ்சார்ந்த நண்பனாகப் பாவித்த தலிபான்களை அமெரிக்கா 2001ம் ஆண்டு குண்டுவீசி தாக்கி படையெடுத்து, ஆப்கனை ஆக்கிரமித்து,  தாலிபன் ஆட்சியை ஏன் அகற்றியது? மதரசா பள்ளியில் பயின்ற மாணவர்களாக  அரசியல் பயணத்தை துவக்கிய தலிபான்கள் கறுப்பு வண்ணம் தரித்தவர்களாக, “ஷரியா ” சட்டத்தை அமுலாக்குவதில் கடுமையானவர்களாக, பெண்களை அடக்கி ஒடுக்குவதில் உச்சமாக விளங்கினார்கள். ஆனால்,அவர்கள் ஆப்கான் மண்ணைத் தீவிரமாக ...