நீதித்துறையில் ஜாதி உணர்வு இருக்கிறதா? ’’ஆம், இருக்கிறது, சந்தேகமில்லை!’’ நீதிபதிகளும் குற்றங்கள் செய்பவர்களா? ’’ஆம்,செய்பவர்களே!’’ நீதிபதிகள் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களா? ’’இல்லை! நூற்றில் ஒரு நீதிபதி இருக்க வாய்ப்புண்டு!’’ இந்த சமூகத்தில் என்னென்ன உன்னதங்கள்,சிறப்புகள் உள்ளனவோ, அவை நீதிகளிடமும் உள்ளன! இந்த சமூகத்தில் என்னென்ன பலவீனங்கள்,குற்றங்களுள்ளனவோ அவை நீதிபதிகளிடமும் உள்ளன! அவர்களும் இந்த சமூகத்தின் உருவாக்கம் தானே! நீதிபதிகளைக் குறித்து நமது அறம் இணைய இதழில் ஏற்கனவே எழுதியுள்ளேன். நீதித்துறையின் மீதான பாலியல் புகார்களை நிராகரிப்பதா? ஆனால், தன்னை சுற்றியுள்ள பாசிடிவ் அம்சங்களை பார்க்கத் தவறி, ...