சித்தர்களின் வழியே பெற்ற ஆழமான அறிவு! எதிலும் தெளிவான உறுதியான பார்வை, நடைமுறை சார்ந்த தீர்வு…ஆகிய சிறப்பம்சங்களை ஒருங்கே பெற்றவர் மருத்துவர் வேலாயுதம். கொரோனா வைரஸை எதிர்த்து உலகமே போராடிக்கொண்டிருக்கும் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 400 பேரை கொரோனவிலிருந்து குணப்படுத்தியுள்ளார். நோயாளிகளைக் காக்கும் களப்பணியில் தன் பங்கையும் தான் சார்ந்துள்ள சித்தமருத்துவத்தின் பங்களிப்பையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் . “அறம்” இணையதள இதழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து… கொரோனா வைரஸ் நோய்க்கும் உரிய மருந்து எது என சித்தர்களின் பாடல்களை ...
அறம் என்றால் என்ன? என்ற வினாவிற்கு மிகச் சிறப்பாக அர்த்தம் சொன்ன பண்டை நூல் திருக்குறள்தான். வள்ளுவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுந்து நிற்கும் தமிழ்ச்சமூகத்தில் மனிதநேய சக்திகளுக்கு பஞ்சம் இருக்குமா? இயற்கை சீற்றங்களால் தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் பல்லாயிரக்கணக்கான உதவும் கரங்கள் இம்மண்ணில் தோன்றி சமூகப்பணி ஆற்றியதை அனைவரும் அறிவோம். குறிப்பாக 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் பெரு வெள்ளத்தில் தத்தளித்த போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் களமிறங்கி ,ஆற்றிய பணிகளை உலகமே பார்த்து வியந்தது . ஓர் ஊருக்கு, மாநிலத்திற்கு அல்லது நாட்டுக்கு பிரச்சினை ...