அன்பு நண்பர்களே, கடந்த சில மாதங்களாக கேட்பதையே விட்டுவிட்டேன். பொது நலன் சார்ந்த பார்வையுடன் சமரசமின்றி வந்து கொண்டிருக்கும் இதழுக்கு தாங்களாகவே முன்வந்து தார்மீக பங்களிக்கட்டுமே..’’ என்று தான் அமைதி காத்தேன்! ஆனால், துர் அதிர்ஷ்டவசமாக விரல்விட்டு எண்ணத்தக்க மிகச் சிலர் தான் தொடர் பங்களிப்பு செய்கின்றனர்! ‘யாராவது ஒரு சிலர் தந்துவிடுவார்கள்! இந்த வேண்டுகோள் நமக்கானதல்ல’ என்று நம்பி கடந்து செல்பவர்களே மிக அதிகமாக இருக்கின்றனர்! இன்னும் எவ்வளவோ பல அம்சங்களை இதழில் கொண்டு வர நினைக்கின்றேன். பொருளாதார சிக்கல்கள் இந்த அளவுக்கு ...

இனிய நண்பர்களே, கடந்த மூன்று மாதமாக அறம் இணைய இதழ் கம்பீரமாக வெளிவருவதை நீங்கள் அறிவீர்கள்! ‘உற்றவர் நாட்டார் ஊரார் – இவர்க்கு உண்மைகள் கூறி,, இனியன செய்தல் நற்றவம் ஆவது கண்டோம்!’ என்ற பாரதியின் வரிகளை மனதில் கொண்டே அறம் இயங்கிக் கொண்டுள்ளது! என் எழுத்தாற்றலை தனிப்பட்ட செல்வாக்கான நபர்களை புகழ்வதற்கோ, பணபலமுள்ள அரசியல் இயக்கங்களை சார்ந்தோ எழுதுவதற்கு பயன்படுத்த முனைந்தால், வாசகர்களிடம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. நேர்மையான, சமரசமற்ற இதழியல் என்பது வாசகர் பங்களிப்பில்லாமல் தொடர்ந்து சாத்தியம் இல்லை என்பதை படிக்கும் ஒவ்வொருவரும் ...