வைரஸினை நம் வாழ்வில் இனி முழுவதுமாக தவிர்க்க முடியாது. ஆனால் அதன் தாக்கத்தினை குறைக்கலாம்! கொரோனா வைரஸ் இனி வெவ்வேறு வடிவங்களில் நம்மோடு வாழவுள்ளது! அதன் நகர்வுகளை, இயல்புகளை கவனித்து வரும் மருத்துவ நிபுணர்கள் அதன் கடந்த காலத் தன்மைகள், நிகழ்கால உருமாற்றங்களை அவதானித்து நாம் எப்படி வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்..! 1980களில் ஒரு பிரித்தானிய வைத்தியசாலையில், மருத்துவ ஆய்வுக்காக அங்குள்ள மருத்துவர்கள் கொரோனா வைரஸை ஏற்றினர். அக்காலத்தில் கோவிட்- 19 உருவாகவில்லை. அந்த மருத்துவ ஆய்வின் கருப்பொருள், கோவிட்-19 இன் குடும்பத்தைச் ...