வைரஸினை நம் வாழ்வில் இனி முழுவதுமாக தவிர்க்க முடியாது. ஆனால் அதன் தாக்கத்தினை குறைக்கலாம்! கொரோனா வைரஸ் இனி வெவ்வேறு வடிவங்களில் நம்மோடு வாழவுள்ளது! அதன் நகர்வுகளை, இயல்புகளை கவனித்து வரும் மருத்துவ நிபுணர்கள் அதன் கடந்த காலத் தன்மைகள், நிகழ்கால உருமாற்றங்களை அவதானித்து நாம் எப்படி வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்..! 1980களில் ஒரு பிரித்தானிய வைத்தியசாலையில், மருத்துவ ஆய்வுக்காக அங்குள்ள மருத்துவர்கள் கொரோனா வைரஸை ஏற்றினர். அக்காலத்தில் கோவிட்- 19 உருவாகவில்லை. அந்த மருத்துவ ஆய்வின் கருப்பொருள், கோவிட்-19 இன் குடும்பத்தைச் ...
கொள்ளை லாபம், மனித நேயம் இல்லாத மருத்துவம், செயற்கை தட்டுப்பாடு, ஆகியவற்றால் இந்திய மருத்துவத் துறை திணறுகிறது! மக்கள் உயிர்காக்கும் விவகாரத்தில் அரசு முற்றிலும் தனியாரை சார்ந்து நிற்கும் அவல நிலையில் உள்ளது! மக்களின் உயிர்காக்கும் மருந்து,மாத்திரைகள் தயாரிக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களை செயல் இழக்க செய்ததன் விளைவை நாடு இன்று சந்திக்கிறது. கொரானா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளாகட்டும், கொரானா தடுப்பூசிக்கான மருந்துகளாகட்டும் தனியார் வைத்ததே விலை என்றாகிவிட்டது. கோஷில்டு மருந்தை மத்திய அரசுக்கு ரூ 150 , மாநில அரசுக்கு ரூ 600 ...
எத்தனையோ முக்கிய பணிகள் காவலர்களுக்கு இருக்கிறது. ஆனால்,தற்போது அவர்களின் ஒரே பணி யார் முகக் கவசம் அணியவில்லை, யார் எச்சில் துப்புகிறார்கள்,..பிடி, விடாதே., போடு அபராதம், எடு பணத்தை என்பதாகிவிட்டது. திருட்டு,கொள்ளை,மோசடி எந்த புகாரும் முக்கியமில்லாமல் போய்விட்டது! மறு பக்கம் வட இந்தியாவில் பல லட்சம் பேர் பங்கேற்கும் கும்பமேளா நடக்கிறது. விவசாயிகள் போராட்டம் தில்லியில் 140 நாட்களைக் கடந்து தொடர்கிறது…! இது ஆழ்ந்த ஆய்வுக்கு உரியது! ஓராண்டு கால கொரானா அனுபவத்தில் நாம் என்ன படிப்பினை பெற்றுள்ளோம்..?தெளிவு பெற்றோம்.தைரியம் பெற்றோம். அதை நடைமுறைபடுத ...
சுவாசம் என்பது சுகமாக நடந்தால் அது சொர்க்கமான வாழ்க்கையாகும்!.அந்தசுவாசமே சுமையாகிப் போனால் அது நரகமான வாழ்வாகும்! அதைத்தான் ஆஸ்துமா என்றழைக்கிறார்கள்! ஆஸ்துமா வந்தவர்கள் அடையும் அவஸ்த்தை அதைப் பார்ப்பவர்களையும் பதைபதைக்க வைக்கும்!ஆஸ்த்துமா வந்தவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும்! ஆக,ஆஸ்துமா வந்தவர்கள் கொரோனா வராமல் தவிர்த்துக் கொள்ள கீழ்கண்ட இயற்கை வாழ்வியலை பழகி வெற்றி கொள்ளுங்கள்! இப்படியாகஆஸ்துமாவில்அவதிப்படுபவர்கள்இந்தியாவில்இரண்டுகோடிபேர்என்பதுஅதிகாரபூர்வதகவல்! ஆனால்இந்தஎண்ணிக்கைஇரண்டுமடங்கிற்கும்அதிகமாகவேஇருக்கலாம்! காரணம், ஆஸ்துமா வருவதற்கான சுற்றுச்சூழல்கேடு இந்தியாவில் இங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருப்பதால் வியாதிஸ்தர்களும் விருத்தியாகிக் கொண்டே உள்ளனர். குப்பைக் கூளங்கள், சாக்கடை நாற்றம், வாகனப்புகை, தொழிற்சாலைப் ...