தமிழ் வழி கல்வி கற்பதும், தமிழ் மொழியை கட்டாயம் கற்பதும் தமிழ் மொழியின் மீது நம்பிக்கை கொள்வதும் நம் தலையாய கடமை. ’தமிழனமே  தமிழ் மொழி மீது நம்பிக்கை கொள்ளவில்லை எனில், எந்த இனம் நம்பிக்கை கொள்ளும். முதலில் பெற்றோர்கள் தமிழின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் பெருகிவரும் ஆங்கில வழி பள்ளிகளால் 50 ஆண்டுகளுக்கு பின், நம் மொழி வெறும் பேச்சுமொழியாக மட்டும் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுத்துகிறது. இந்தியாவில் உள்ள மொழிகளுக்கு இந்த ஆபத்து வரலாம். வரக்கூடும். எந்த மொழிக்கும் வரக்கூடாது ...