வட கொரியா என்றாலே இரும்புக் கோட்டை, சர்வாதிகாரம் என்பதே பொதுப் புரிதல்! இந்த நாடு குறித்த புதிரான, கொடூரமான சம்பவங்கள் உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன! ஆனானப்பட்ட அமெரிக்காவையே மிரள வைக்கும்  வட கொரியாவில் உண்மையில் என்ன நடக்கிறது? தன்னை ஒரு புரட்சிகர  சோசலிஷ நாடாக பிரகடனப்படுத்திக் கொள்கிறது, வட கொரியா! அங்குள்ள மக்கள் அனைவருக்கும் உணவு , மருத்துவம்,கல்வி ஆகியவற்றை உத்திரவாதம் செய்து உறுதிபடுத்தியுள்ளது! வெளி நாட்டு நச்சு கலாசாரம் உள் நுழைய முடியாத நாடாக அது உள்ளது! ரசாயன உரங்களை ...