விலங்குகளால் மனிதன் இறப்பதை விட, மனிதனால் காட்டு விலங்குகள் இறப்பது நூறு மடங்கு அதிகம்..! புலால் உண்ணும் விலங்குகள் பொதுவாக மனிதனைக் கொல்வதில்லை என்பது ஆச்சரியமாகத் தெரிந்தாலும்,அதுவே முற்றிலும் உண்மையாகும். மனிதன்-விலங்கு மோதல் சூழல் எப்படி ஏற்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்..! இயற்கையாக விலங்குகளுக்கு மனிதன் இரை கிடையாது. சட்டப்படி மனிதனுக்கும் காட்டு விலங்குகள் உணவு கிடையாது. இப்படியிருக்க விலங்குகள் ஏன் மனிதனைக் கொல்கின்றன…? சிறுத்தை ஒன்று  லாரி ஓட்டுனரை அதிகாலை கொன்றது, புலி மனிதனை அடித்திழுத்துச் சென்றது,யானை வன ஊழியரைத் தாக்கியது என்று பத்திரிகையில் அவ்வப்பொழுது செய்திகள் வரும். ...