புகழ்மிக்க ஒரு நடிகையின் துன்பமும், வலியும் நிறைந்த சொல்லப்படாத மறுபக்க வாழ்வை சித்தரிக்கும் சீரியலே Fame Game. நடிகையின் குடும்ப வாழ்க்கையும், திரையில் அவள் வளர்ந்த விதமும் மாறி, மாறி சொல்லப்படுகிறது. இது நமக்குத் தெரிந்த பல திரை நட்சத்திரங்களின் வாழ்வை நினைவுபடுத்துகிறது. தொண்ணூறுகளில் வெளியான கல்நாயக் படத்தின் ‘சோளி கே பீச்சே கியா ஹை’ என்ற பிரபல பாடல் புகழ், மாதுரி திக்ஷித்தான், Fame Game என்ற இந்தித் தொடரில் அனாமிகா ஆனந்த் என்ற நடிகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு நடிகையின் குடும்ப ...