‘ஜல்சா’ என்பதற்கு ஒன்று சேர்தல் எனப் பொருள்!  படு விறுவிறுப்பான இந்த இந்திப் படம் ஓடிடி தளத்தில் ஒடுகிறது! மனித நேயமின்றி மனசாட்சியை அலட்சியப்படுத்தும் போது, குற்றவுணர்வு எப்படி கொன்று போடுகிறது என்பதும், இப்படிப்பட்டவர்களை மன்னிப்பதா? வேண்டாமா? என்பதும் உயிர்ப்போடு சொல்லப்படுகிறது! மும்பையின் உயர் வகுப்பை சார்ந்த ஒரு ஊடகவியலாளராக வித்தியாமேனன் நடித்துள்ளார். இவர்  இரவில் ஒரு இளம் பெண் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தி  விடுகிறார். அவரிடம் பணி புரியும் சமையலரின் பெண் தான் விபத்திற்குள்ளானவள்! தன்னிடம் உண்மையை மறைக்கும் முதலாளியம்மா  ...

புகழ்மிக்க ஒரு  நடிகையின் துன்பமும், வலியும் நிறைந்த சொல்லப்படாத மறுபக்க வாழ்வை சித்தரிக்கும் சீரியலே Fame Game. நடிகையின் குடும்ப வாழ்க்கையும், திரையில் அவள் வளர்ந்த விதமும் மாறி, மாறி சொல்லப்படுகிறது. இது  நமக்குத் தெரிந்த பல திரை நட்சத்திரங்களின் வாழ்வை நினைவுபடுத்துகிறது. தொண்ணூறுகளில் வெளியான கல்நாயக் படத்தின் ‘சோளி கே பீச்சே கியா ஹை’ என்ற பிரபல பாடல் புகழ், மாதுரி திக்‌ஷித்தான், Fame Game என்ற இந்தித் தொடரில் அனாமிகா ஆனந்த் என்ற நடிகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு நடிகையின் குடும்ப ...