சுயத்தை இழந்தவர்கள்,பயத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள்! அரசியல் கார்ப்பரேட் பிசினஸாக உருமாறியுள்ளது என்பதற்கான அடையாளம் தான் பிரசாந்த் கிஷோரும்,அவரைப் போன்ற தேர்தல் வியூக நிறுவனங்களும்! மேற்குவங்கத்தில் திரிணமுள் காங்கிரசுக்கு தேர்தல்வியூக பொறுப்பை பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திற்கு தந்தார்! இது தற்போது திரிணமுள் காங்கிரசிற்குள் புயல்வீச காரணமாயிற்று! மேற்குவங்க ஆளும் கட்சியாக திரிணமுள் இருப்பதால் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இணையாக தனக்கும் Z கேட்டகிரியில் பாதுகாப்பை பெற்றுக் கொண்டார் பிரசாந்த் கிஷோர். மிக பிரமாண்ட கார்ப்பரேட் அலுவகம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு பல லட்சங்கள் மற்றும் பல ...