வீரம் செறிந்த விளையாட்டுத் தான்! ஆனால், இதில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விபரீதங்களை உயிர்பலிகளை, படுகாயமுற்று வாழ்க்கையை தொலைத்து முற்றிலும் நடைபிணமாகப் போகிறவர்களைக் குறித்து ஏன் மூச்சுவிட மறுக்கிறார்கள்..? வீர விளையாட்டு என பெயர் சூட்டி விபரீதங்களை வலிந்து ஏற்படுத்திக் கொள்கிறோம் என்று கூட தோன்றுகிறது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் வரை நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு என்ற பெயர்களில் நடத்தப்பட்டு வந்த மாடுபிடி விளையாட்டு தற்போது திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வட தமிழக ...