கண்ணுக்கு கவர்ச்சியாக இருக்கும் உணவுகளை விரும்பி, வீழ்கிறோம் நோயில்! பல்வேறு விதமாக உணவில் நாம் சேர்க்கும் நிறமூட்டிகள் எவ்வளவு ஆபத்தானவை எனத் தெரிந்து கொள்வோம். உணவு… உயிர்வாழ உதவுகிறது. `உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் உணவு மருந்தாகவும் பயன்படுகிறது. ஆனால், தவறான உணவு சில நேரங்களில் நோய்களையும் உருவாக்குகிறது. உணவு உணவாக இருந்தவரைக்கும் பிரச்சினையில்லை, என்றைக்கு அது பெரும் வியாபாரப்பொருளாக மாறியதோ அன்றைக்கே அது தடம் மாறிவிட்டது. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் உணவில் சுவையூட்டிகளையும், நிறமூட்டிகளையும் அளவுக்கு மீறி சேர்க்கின்றனர். ...
இந்தியாவில் தடுப்பூசி தொடர்பான புகார்கள் எந்த அளவுக்கு தவிர்க்கப்படுகின்றன, அலட்சியப் படுத்தப்படுகின்றன? ஆனால், உண்மை நிலவரங்கள் என்ன..? என்பதைக் குறித்து புள்ளி விபரங்களுடன் தெளிவாக சர்வதேச அளவில் அம்பலப்படுத்துகிறார் பிரியங்கா புல்லா. ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தும் போது பின்பற்ற வேண்டிய கண்காணிப்புடன் கூடிய பாதுகாப்பு வழிமுறைகளை உலகசுகாதார அமைப்பு தெளிவாக தந்துள்ளது. ஆனால், அவை இந்தியாவில் பின்பற்றப்படுவதே இல்லை. ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தும் முன்பாக அவரது உடல் நிலையை அறிவது, தடுப்பூசியின் பாதக விளைவுகள் பற்றிச் சொல்லுவது, ஊசிக்குப் பிறகு பின்பற்ற வேண்டியவை, தொந்தரவுகள் ...
வீரம் செறிந்த விளையாட்டுத் தான்! ஆனால், இதில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விபரீதங்களை உயிர்பலிகளை, படுகாயமுற்று வாழ்க்கையை தொலைத்து முற்றிலும் நடைபிணமாகப் போகிறவர்களைக் குறித்து ஏன் மூச்சுவிட மறுக்கிறார்கள்..? வீர விளையாட்டு என பெயர் சூட்டி விபரீதங்களை வலிந்து ஏற்படுத்திக் கொள்கிறோம் என்று கூட தோன்றுகிறது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் வரை நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு என்ற பெயர்களில் நடத்தப்பட்டு வந்த மாடுபிடி விளையாட்டு தற்போது திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வட தமிழக ...
ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகரம் வழக்கத்தை விட இந்த முறை அதிகமாகவே பட்டாசுப் புகையில் சிக்கித் திணறியது. மேக மூட்டமும், விடாமல் பெய்த மழையும், குளிரும், முதியவர்களுக்கும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் சற்று சிரமத்தை தந்தன! விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததற்காக தமிழ்நாட்டில் 1614 வழக்குகளும் சென்னை மாநகரில் 758 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 517 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு கடை நடத்தியதற்காக 239 வணிகர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர். நூற்றுக்கு மேற்பட்டோர் பட்டாசுவெடியால் ...
தேசிய கல்வி கொள்கை 2020 க்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி தேசம் தழுவிய பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் நோக்கம், தனியார்மயம், வியாபாரமயம் ,காவி மயம் -என்பது தான்! இதை அனுமதித்தால் வரும் நாளில் எல்லாவற்றையும் இழந்து நிற்போம்.! ஆகவே, இதில் உள்ள தீமைகளை அம்பலப்படுத்தும் விதமாக வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. இந்தக் கல்விக் கொள்கை மதச்சார்பின்மை மற்றும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ...
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளது குறித்து பல உலக நாடுகளும், ஐ.நா சபையும் அச்சம் தெரிவித்து வருகின்றன. ”அங்கு தற்போது மக்கள் சந்திக்கும் பேராபத்து உலக நாடுகளுக்கே அசிங்கம், பெரும் தோல்வி” என்று ஜெர்மன் அதிபர் தெரிவித்துள்ளார். ”அமெரிக்கா ஆப்கான் மக்களை அந்தோவென கைவிட்டுவிட்டது. இது மாபெரும் துரோகம்” என இங்குள்ள இந்துத்துவ ஆதரவாளர்கள் எழுதுகிறார்கள்! ”இனி’ ஆப்கானில் கொலைகள் நடந்தேறும்,கொடூரங்கள் நடந்தேறும்” என பலர் எழுதியும் பேசியும் வருகிறார்கள்! இப்படியான பார்வைகள் சில யதார்த்தங்களை உணராமல் அல்லது உள் வாங்க விரும்பாமல் வெளிப்படுகின்றன ...
யானைகளை யாருக்குத் தான் பிடிக்காது. அதன் கம்பீரத்தை பார்க்கும் போதே ஏதோ ஒரு உற்சாக ஊற்று நமக்குள் தோன்றுகிறது! அது நடக்கும் நடையழகோ வித்தியாசமானது. அதன் மிகச் சிறிய கண்கள், பெரிய காதுகள், நீண்ட தும்பிக்கை..யாவும் பரவசம் தரக் கூடியவை! வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. யானை முகம் கொண்ட கடவுளை ஆண்டு தோறும் வழிபடும் நாம் யானையை பாதுகாப்பதில் எவ்விதமான அக்கறையை கொண்டிருக்கிறோம்…? ஒரு பக்கம் யானையின் தலைதான் கடவுள். மற்றொரு பக்கம் உயிருள்ள அதே யானையை பிச்சை ...
மருத்துவத்தால் மனிதன் பிழைத்தான் என்பது அந்தக் காலம்! மனிதனை அழித்து மருத்துவம் பிழைக்கின்றது என்பது நிகழ்காலம்! சில தனியார் மருத்துவமனைகள் தருவது சிகிச்சையா..? சித்திரவதைகளா? தீவட்டி கொள்ளையனைவிட தீய கொள்ளையர்களாக தனியார் மருத்துவமனைகள் சில மாறி வருகின்றன..! கொரொனா கால மருத்துவ கொள்ளைகள் வரைமுறையின்றி செல்கின்றன! நவீன ஆங்கில மருத்துவத்தின் மீதல்ல, மக்கள் கோபம்! அதை கையாளுகின்ற சில மருத்துவர்களின் அணுகுமுறைகளில் தான் உள்ளன! ஒரே ஒரு எளிய மருந்தில் குணப்படுத்திவிட முடிந்த நோய்களுக்கு கூட நான்கைந்து மருந்துகளை எழுதித் தரும் டாக்டர்கள் மீது ...