இது வரையிலான தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு சில குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களாவது இருந்தன. ஆனால், தற்போதைய பாஜக அரசோ, புதிய பணிச்சூழல் சட்டத் தொகுப்பின் வழியாக தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கி கொள்ளலாம் என சூசகமாகச் சொல்கிறது! எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்கிக் கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அவசியமில்லை. எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கலாம்…இப்படியாக எண்ணற்ற சுதந்திரங்களை முதலாளிகளுக்கு அள்ளி வழங்குகிறது மோடி அரசு! இது வரை தொழிலாளர்களுக்கு ஒரளவேனும் பாதுகாப்பளித்த  44 சட்டங்களைச் சுருக்கி, 4 தொழிலாளர் சட்டத் ...

தேசிய கல்வி கொள்கை 2020  க்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய கல்வி  பாதுகாப்பு கமிட்டி தேசம் தழுவிய பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் நோக்கம், தனியார்மயம், வியாபாரமயம் ,காவி மயம் -என்பது தான்! இதை அனுமதித்தால் வரும் நாளில் எல்லாவற்றையும் இழந்து நிற்போம்‌.! ஆகவே, இதில் உள்ள தீமைகளை அம்பலப்படுத்தும் விதமாக வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. இந்தக் கல்விக் கொள்கை  மதச்சார்பின்மை மற்றும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ...