ஒரு சமூகத்தின், அந்த மண்ணின் அடையாளம் கல்வி தான்! கல்வியில் தவறாக கைவைப்பது ஒரு சமூகத்தையே காவு கொடுப்பதாகும். அந்த வகையில் தமிழ்நாட்டிற்கான ஒரு கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வு! இது ஒரு சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல…! 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ ...

தேசிய கல்வி கொள்கை 2020  க்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய கல்வி  பாதுகாப்பு கமிட்டி தேசம் தழுவிய பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் நோக்கம், தனியார்மயம், வியாபாரமயம் ,காவி மயம் -என்பது தான்! இதை அனுமதித்தால் வரும் நாளில் எல்லாவற்றையும் இழந்து நிற்போம்‌.! ஆகவே, இதில் உள்ள தீமைகளை அம்பலப்படுத்தும் விதமாக வருகிற 30, 31 ஆகிய தேதிகளில் மாபெரும் மாநாடு நடைபெறுகிறது. இந்தக் கல்விக் கொள்கை  மதச்சார்பின்மை மற்றும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ...

தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து ஊடகங்களும், பிரபல கல்வியாளர்களும் பொய்யான பிம்பங்களைக் கட்டமைத்து மக்களை குழப்புகிறார்கள்! அவர்கள் கட்டமைக்கும் பொய்கள் என்ன..? மறைக்கப்படும் உண்மைகள் என்ன..? ‘தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாடு கல்வித் தரங்களை மேம்படுத்து வதற்கான தனது வாய்ப்பை இழந்து விடக்கூடும்’ என தி ஹிந்து ஆங்கில நாளிதழ் எச்சரிக்கிறது. பேராசிரியர் பாலகுருசாமியை மேற்கோள் காட்டி ‘தேசிய கல்விக் கொள்கை-2020 தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு இருக்க விரும்பவில்லை எனில், கல்வித் தரங்களையும், சாதனைகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை தமிழகம் இழந்து ...