ஒரு சமூகத்தின், அந்த மண்ணின் அடையாளம் கல்வி தான்! கல்வியில் தவறாக கைவைப்பது ஒரு சமூகத்தையே காவு கொடுப்பதாகும். அந்த வகையில் தமிழ்நாட்டிற்கான ஒரு கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைக்கப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வு! இது ஒரு சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல…! 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ ...
நீதிமன்றமே கண்டித்துள்ளது. சட்டவிரோதமாக டாஸ்மாக் பார்களை 18 ஆண்டுகளாக தமிழக அரசே நடத்தி வந்துள்ளதாம்! அதனால், அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதங்களுக்குள் மூடவேண்டுமாம்!, சமீபத்திய பார் டெண்டர்களும் ரத்தாகிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணி என்ன? தமிழ்நாட்டில் மது கலாச்சாரத்தை அதிகப்படுத்தி வளர்த்து எடுப்பதில் திமுக, அதிமுக இடையே எந்த வித்தியாசமும் இல்லை. மது விற்பனையோடு இருந்தால் கூட ஓரளவு மது பழக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், மதுக் கடைகளுடன் பார்களை நடத்துவது தூண்டில் போட்டு குடிகார்களை அழைக்கும் முறையாகும்! ...
திருவொற்றியூரில் 25 ஆண்டு கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது என்றால்…, தற்போது இரண்டரை ஆண்டுகளில் இடிந்து விழத் தயாராக இருக்கும் கே.பி.பார்க் உள்ளிட்ட பல நூறு குடியிருப்புகள் விவகாரத்தில் திமுக அரசு மெளனம் கடைபிடிப்பது ஏன்? கரப்ஷன் + கமிஷன் + கலெக்ஷன் = கழகங்கள்! எந்தக் கட்டிடமும் முறையாகக் கட்டப்பட்டால் குறைந்தபட்சம் 75 ஆண்டுகள் தொடங்கி 100 ஆண்டுகள் நிச்சயம் தாக்குப் பிடிக்கும். ஆனால், அரசு கட்டிக் கொடுக்கும் குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகள் மட்டும் ஏன் 25 முதல் 30 ஆண்டுகளில் வாழத் தகுதியற்றுப் ...
சமீபத்தில் தமிழக சுகாதாரத் துறையின் ஒரு சுற்றறிக்கை மக்களிடையே பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாடுவதை கேள்விக்கு உள்ளாக்குவதாக – கட்டுப்படுத்தும் தோரணையில் – உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் உடல் நலன் சார்ந்து முடிவெடுத்து உயிர் வாழும் உரிமை உள்ளது! தடுப்பூசியை திணிக்கக் கூடாது என நீதி மன்றங்கள் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளன!அதை உறுதிபடுத்துவதே அரசாங்கத்தின் கடமை! அதை மீறுவதாக அந்த சுற்றறிக்கை இருந்ததையடுத்து அதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார் மருத்துவர் பிரேமா! மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். தடுப்பூசி செலுத்தியவர்கள் ...