இது வரையிலான தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு சில குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களாவது இருந்தன. ஆனால், தற்போதைய பாஜக அரசோ, புதிய பணிச்சூழல் சட்டத் தொகுப்பின் வழியாக தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கி கொள்ளலாம் என சூசகமாகச் சொல்கிறது! எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் வேலை வாங்கிக் கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அவசியமில்லை. எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கலாம்…இப்படியாக எண்ணற்ற சுதந்திரங்களை முதலாளிகளுக்கு அள்ளி வழங்குகிறது மோடி அரசு! இது வரை தொழிலாளர்களுக்கு ஒரளவேனும் பாதுகாப்பளித்த 44 சட்டங்களைச் சுருக்கி, 4 தொழிலாளர் சட்டத் ...
”யாரும் எதிர்க்க முடியாது. உண்மைகளை சொல்ல முடியாது. நடப்பது மாபெரும் சர்வாதிகார ஆட்சி, அடங்கிப் போவதே ஆட்சியை தக்க வைக்கும்’’ என்ற ரீதியில் சென்ற ஆட்சியாளர்கள் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத சட்டங்களையும் ஆதரித்து வந்தது. இதை கண்டு சலிப்புற்று, வேதனையுற்று தமிழக மக்கள் புழுங்கிய நேரத்தில் தான் தேர்தல் வந்தது. கடந்த ஆட்சியாளர்களுக்கு மக்கள் கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள். அதை சரி செய்வதற்கே புதிய ஆட்சியாளர்கள் என மக்கள் நம்பினர். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. # ...
அவருக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கட்சியில் ஒருவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் அல்லது தொடர்ந்து இருக்க வேண்டும் என்றாலும் அவர் தயவு தேவை என்கிறார்கள்! அவர் ஆட்சியில் எம்.எல்.ஏவும் இல்லை, அமைச்சரும் இல்லை, ஆனால், யாரும் எம்.எல்.ஏவோ அமைச்சரோ ஆக வேண்டும் என்றால், அவர் கடைக் கண் பார்வை தேவை என்கிறார்கள். அதிகாரிகள் முக்கிய பதவிகளை அடைவதற்கும் அவரையே நாடுவதாகத் தெரிகிறது. பெரும் தொழில் அதிபர்கள் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் அவர் வழியே அணுகுவதாக சொல்லப்படுகிறது. அதாவது அதிகாரம் ...
தேசத்துரோக சட்டம் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த சம்மட்டி அடி ! இன்னும் சுதந்திர நாட்டில் தான் வாழ்கிறோமா அல்லது அடிமை இந்தியாவில் வாழ்கிறோமா என சந்தேகப்படும்படி பிரிட்டிஷ் அரசு இந்திய சுதந்திரப் போராட்டத்தை அடக்க 1870 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேச துரோக வழக்கை தற்போதும் மத்திய,மாநில அரசுகள் எடுத்ததற்கெல்லாம் பயன்படுத்தி வருவதை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதன் பின்னணியில் அதிமுக, பாஜக அரசுகள் ஆடிய ஆட்டங்கள் கொஞ்சமா.. நஞ்சமா..? கடந்த 4 மாதங்களாக இந்திய நீதித்துறையின் ...