கண்ணுக்கு கவர்ச்சியாக இருக்கும் உணவுகளை விரும்பி, வீழ்கிறோம் நோயில்! பல்வேறு விதமாக உணவில் நாம் சேர்க்கும் நிறமூட்டிகள் எவ்வளவு ஆபத்தானவை எனத் தெரிந்து கொள்வோம். உணவு… உயிர்வாழ உதவுகிறது. `உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் உணவு மருந்தாகவும் பயன்படுகிறது. ஆனால், தவறான உணவு சில நேரங்களில் நோய்களையும் உருவாக்குகிறது. உணவு உணவாக இருந்தவரைக்கும் பிரச்சினையில்லை, என்றைக்கு அது பெரும் வியாபாரப்பொருளாக மாறியதோ அன்றைக்கே அது தடம் மாறிவிட்டது. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் உணவில் சுவையூட்டிகளையும், நிறமூட்டிகளையும் அளவுக்கு மீறி சேர்க்கின்றனர். ...
22 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை தன் வரலாறு என சுருக்கி வகைப் படுத்த இயலாது. சட்டம், நீதிமன்றம், வழக்குரைஞர்களின் தொழில், பல முக்கிய வழக்குகள், தீர்ப்புகள்.. இவற்றை உண்மைச் சம்பவங்களுடன் இணைத்துச் சொல்லும் போது, அது சமகால சமூக, அரசியல் வரலாறாக ஆகி விடுகிறது! ஜெய்பீம் திரைப்பட வெற்றியைத் தொடந்து, வெகுமக்களின் அன்பிற்குரியவராக கே.சந்துரு மாறிவிட்டார். மாணவர் சங்கத் தலைவர், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்,வழக்கறிஞர், நீதிபதி என பல நிலைகளில் இவர் பணியாற்றியுள்ளார். வழக்கறிஞராக பணிபுரிந்த காலத்தில் மனித உரிமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ...
இந்தியாவில் தடுப்பூசி தொடர்பான புகார்கள் எந்த அளவுக்கு தவிர்க்கப்படுகின்றன, அலட்சியப் படுத்தப்படுகின்றன? ஆனால், உண்மை நிலவரங்கள் என்ன..? என்பதைக் குறித்து புள்ளி விபரங்களுடன் தெளிவாக சர்வதேச அளவில் அம்பலப்படுத்துகிறார் பிரியங்கா புல்லா. ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தும் போது பின்பற்ற வேண்டிய கண்காணிப்புடன் கூடிய பாதுகாப்பு வழிமுறைகளை உலகசுகாதார அமைப்பு தெளிவாக தந்துள்ளது. ஆனால், அவை இந்தியாவில் பின்பற்றப்படுவதே இல்லை. ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தும் முன்பாக அவரது உடல் நிலையை அறிவது, தடுப்பூசியின் பாதக விளைவுகள் பற்றிச் சொல்லுவது, ஊசிக்குப் பிறகு பின்பற்ற வேண்டியவை, தொந்தரவுகள் ...
வல்லரசுகளின் கல்லறை ஆப்கானிஸ்தான் (பகுதி 1) வரலாறு நெடுக அடுத்தடுத்து ஆக்கிரமிப்பாளர்களை வரவேற்று, அவர்களுக்கு கல்லறை எழுப்பி வருகிறது ஆப்கானிஸ்தான்! எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் பின்லேடனையும், தலிபான்களையும் வளர்த்த அமெரிக்கா.., தான் விரித்த வலையில் தானே சிக்குண்ட கதையை பார்ப்போமா..? அமெரிக்க படைகளின் கடைசி விமானம் ,தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஆப்கானிஸ்தான் மண்ணை விட்டு கிளம்பியவுடன் தலிபான் படையினர் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “இன்று ஆப்கான் நாடு அந்நியர் அனைவரையும் வெளியேற்றி சுதந்திர காற்றை சுவைக்கிறது” என்று கொண்டாடத் துவங்கினர். ...
விடுதலை போராட்டங்கள் குறித்து ஏராளமான புத்தகங்கள் படிதிருக்கிறோம். ஆனால் போராட்டங்கள்- பேச்சுவார்த்தை- தீர்வு எனும் முத்தன்மையை முதன்மையாக்கி அதில் பேச்சுவார்த்தை- தீர்வு எனும் பகுதிகளுக்கு அழுத்தம் தந்து வந்த புத்தகங்கள் மிகக்குறைவு. அப்படிப்பட்ட புத்தகத்தில் ஒன்று வி பி மேனனின் Transfer of Power in India – இந்தியாவில் அதிகார மாற்றம். நவீன இந்தியா தோன்ற ஆகச் சிறந்த காரியங்களை ஆற்றிய மேனன் விடுதலை இந்தியாவில் அதிக வெளிச்சம்படாத மனிதர். ’இனி அரசாங்கப் பணி ஏதுமில்லை’ என ஒதுங்கிய காலத்தில் வி பி ...
சுதந்திர தின சூழலில் பல எண்ண ஓட்டங்கள் மின்னலாய் தோன்றுகின்றன.கடந்து வந்த பாதையும், எதிர்கொண்ட சோதனைகளும் நம்கண்முன் விரிகின்றன. காலனி ஆதிக்கத்தை வீழ்த்தி விடுதலை பெற்ற நாடுகளில் இந்தியா ஒரு தனித்தன்மையுடன் திகழ்ந்தது. எண்ணற்ற கனவுகளுடன், நமது விதியை நாமே முடிவு செய்யும் அதிகாரத்தை பெற்ற நாம் , நமது விடுதலை இயக்கத்தின் குறிக்கோள்களை அடைய செம்மையான ஒரு முறைமையை ஏற்படுத்தவும் சூளுரைத்தோம். அதில் பெருமளவு வெற்றியும் கண்டோம். காந்தி, நேரு, பட்டேல், நேத்தாஜி, அபுல் கலாம் ஆசாத் மற்றும் அம்பேத்கர் போன்ற மாபெரும் ஆளுமைகள் ...
பதவியேற்ற ஏழு ஆண்டுகளில், மோடி அரசாங்கம் இப்போது போல எப்போதும் ஆட்டம் கண்டதில்லை. அதனுடைய ஈர்ப்பின் சக்தி குறைந்து வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலையைக் கோளாறாகக் கையாண்டது – குறைவான பரிசோதனை செய்தது மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது, பெருந்தொற்றை எதிர்கொள்ள ஆயத்தமில்லாமல் போனது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி போடுதலில் ஏற்பட்ட குளறுபடிகள் – கொடுமையின் எல்லையை நிரூபித்துள்ளது… ஆகியவை மோடி மீது வலுவான சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது! மோடியின் பரம விசுவாசிகள் பலருக்கே கூட, இந்த முக்கியமான காலகட்டத்தில் அரசாங்கம் என்ற ஒன்று ...