பொறுக்க முடியாத நச்சுப் புகை, சகிக்க முடியாத நச்சுக் கழிவு, வெறுக்கக் கூடிய சுற்றுச் சூழல்.. வெந்து தணியும் வாழ்வு.. என உழலும் வட சென்னையை மேலும் வாழத் தகுதியற்றதாக்க, ஈவு இரக்கமில்லாமல் கருத்து கேட்பாம்! இதோ நாளும், நாளும் மக்கள் கதறிக் துடிப்பதெல்லாம் உங்களுக்கு கேட்கவேயில்லையா..? அதென்னவோ தெரியவில்லை. ஏற்கனவே சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வட சென்னையில் மீண்டும், மீண்டும் சூழல் சீர்கேட்டை விளைவிக்கும் உற்பத்தி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ...

ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகரம் வழக்கத்தை விட இந்த முறை அதிகமாகவே பட்டாசுப் புகையில் சிக்கித் திணறியது. மேக மூட்டமும், விடாமல் பெய்த மழையும், குளிரும்,  முதியவர்களுக்கும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் சற்று சிரமத்தை தந்தன! விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததற்காக தமிழ்நாட்டில் 1614 வழக்குகளும் சென்னை மாநகரில் 758 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 517 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு கடை நடத்தியதற்காக 239 வணிகர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.  நூற்றுக்கு மேற்பட்டோர் பட்டாசுவெடியால் ...