அடுத்தடுத்து காஷ்மீர் பண்டிட்டுகளின் படு கொலைகள்! ”காஷ்மீரின் சமூக உறவுகளை புரிந்து கொள்ளாமல், அரசியல் உள் நோக்கங்களுக்காக ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் செய்யும் அரசியலே இன்று நாங்கள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, வெளியேறும்படி தள்ளப்பட்டு உள்ளோம்” என்கிறது காஷ்மீர் பண்டிட்  கங்க்ரஷன் சமிதி ! காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக 10 பேர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்களாவர். மீண்டும் காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளது! இதைத் தான் பாஜக அரசு விரும்பியதா..? என்ற ...

கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக எத்தனை விவசாயிகளையும் காவு கொடுக்கத் தயார் என வரலாறு காணாத வகையில் இந்தியாவில் காட்டாட்சி நடத்தி வரும் மத்திய பாஜக அரசின் அமைச்சர் அஜய்மிஸ்ரா சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் போராட்டத்தை இரண்டே நிமிடத்தில் முடித்து வைக்க என்னால் முடியும்’’ என்று பேசி இருந்தார்! அதைதான் அவர் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது வன்முறை நிகழ்த்தி பயமுறுத்தி பார்க்க முயன்றுள்ளார்! ஜனநாயகத்தில் கருப்பு கொடி காட்டுவது என்பது அமைதியான வகையில் எதிர்ப்பை தெரிவிக்க செய்யும் ...

யானைகளை யாருக்குத் தான் பிடிக்காது. அதன் கம்பீரத்தை பார்க்கும் போதே ஏதோ ஒரு உற்சாக ஊற்று நமக்குள் தோன்றுகிறது! அது நடக்கும் நடையழகோ வித்தியாசமானது. அதன் மிகச் சிறிய கண்கள், பெரிய காதுகள், நீண்ட தும்பிக்கை..யாவும் பரவசம் தரக் கூடியவை! வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி. யானை முகம் கொண்ட கடவுளை ஆண்டு தோறும் வழிபடும் நாம் யானையை பாதுகாப்பதில் எவ்விதமான அக்கறையை கொண்டிருக்கிறோம்…? ஒரு பக்கம் யானையின் தலைதான் கடவுள். மற்றொரு பக்கம் உயிருள்ள அதே யானையை பிச்சை ...

சினிமாவையும் விட்டு வைக்கவில்லை பாஜக அரசு! இனிமேல் அரசியல் பேசும் சினிமாக்களையோ.., விழிப்புணர்வு தரும் சினிமாக்களையோ கற்பனை கூட செய்யமுடியாது! அப்படி ஒரு Cinematograph Act ஐ பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. எத்தனை திரைப் படைப்பாளிகளுக்கு இதை எதிர்க்கும் திரானி உள்ளது என்பதை பார்ப்போம். ஏற்கனவே இருந்த Cinematograph Act 1952 வில் இருந்த சில அம்சங்களை மாற்றி தற்போது Cinematograph Act 2021ஐ மத்திய அரசு கொண்டுவரவுள்ளது! இதன்படி சென்ஸார் போர்டு சர்டிபிகேட் தந்துவிட்டாலும் கூட ஒரு படத்தை அரசு நினைத்தால் ...