ராஜ்யசபையில் இடைக்கால சஸ்பெண்ட் செய்யப்பட்டு போராடிக் கொண்டிருக்கும் எம்.பிக்களுக்கு ஹரிவன்ஷ் சிங் காலையில் தேநீர் கொடுக்க வந்ததைப் புறக்கணித்தனர் எட்டு எம்.பிக்களும்! இதென்ன, ஏதோ தேநீர் கிடைக்கவில்லை என்பதற்காக இவர்களெல்லாம்,போராட்டம் நடத்தி வருகிறார்களா…? அல்லது என்னை எதிர்த்தவர்களுக்கும் நான் தேநீர் கொடுத்தேன் என, ஹரிவர்ஷன் சிங் அவரது பெருந்தன்மையை வெளிக்காட்டிக் கொள்ளும் ராஜதந்திரமா? எவ்வளவு கீழ்த்தரமாகப் பிரச்சினையைத் திசைதிருப்ப நாடகங்கள் அரங்கேறுகின்றன என்று பாருங்கள்…! இவர் கொடுக்கும் தேநீரை வாங்கி குடித்துவிட்டு, விவசாயிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று எம்.பிக்கள் எழுந்து போய்விடுவார்கள் என நினைத்தாரா…தெரியவில்லை. ராஜ்ய சபை என்பது அறிஞர்கள், அனுபவஸ்தர்கள்,மூத்த அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு சபையாகும். ஆனால்,அந்த சபையைக் கட்டப்பஞ்சாயத்தாக மாற்றிய ...