இயற்கை வேளாண் விஞ்ஞானி, சூழலியல் போராளி, இயற்கை விவசாயத்தில் 30 ஆண்டுகால முன்னோடி,இயற்கை விவசாயப் பயிற்சியாளர்,எழுத்தாளர்,இதழாளர்.. என பன்முகம் கொண்டவர் பாமயன்!. தமிழகத்தின் தற்போதை விவசாயச் சூழல்கள் குறித்தும், சமீபத்திய மூன்று வேளாண்மைச் சட்டங்கள் குறித்தும் பீட்டர்துரைராஜுக்கு அவர் தந்த நேர்காணல். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண்மைச் சட்டங்கள் குறித்து்? மத்திய பாஜக அரசானது, அதிர்ச்சிகரமான வகையில், # உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) # விலை உறுதிப்பாட்டில் உழவர் (அதிகாரப்படுத்தல், பாதுகாத்தல்) ஒப்பந்தம், # பண்ணைச் சேவை ...