இன்றைய திமுகவிற்கு உண்மையான தலைவர் யார் என்ற குழப்பம் அந்த கட்சிக்குள்ளும்,கூட்டணி கட்சிகளுக்கும் எழுந்துள்ளது? இன்னின்ன தொகுதியில் இன்னார் தான் திமுக வேட்பாளர்! இவருக்கு வாய்ப்பில்லை, இவருக்கு வாய்ப்பு! இன்ன வயதுக்குள்ளானவர்கள் மட்டுமே வேட்பாளராக தேர்வாவார்கள்! திமுக இத்தனை இடங்களில் நிற்கும், அதன் கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு சீட்டுகள் தரப்படவுள்ளன. இந்த மாதிரி செய்திகளையெல்லாம் சொல்லும் அதிகாரம் அந்த கட்சித் தலைமைக்குத் தான் கருணாநிதி காலம் வரை இருந்தது. ஆனால்,அந்த அதிகாரம் தற்போது பிரசாந்த் கிஷோரின் ’ஐபேக்’ நிறுவனம் வசம் சென்றுவிட்டதா? தெரியவில்லை. ...