ஒட்டுமொத்த இந்தியாவையும் எடுத்து தனியார்களிடம் விற்றால் மட்டுமே எங்கள் லட்சியம் நிறைவேறும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பாஜக அரசு! 1951 ல் இந்தியா குடியரசான போது வெறும் ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இருந்தன! ஆனால், ஜவகர்லால் நேரு தொடங்கி வைத்த லட்சிய பயணத்தில் காலப்போக்கில் அது 348 நிறுவனங்களாக வளர்ந்து கோடிக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும், தேசத்திற்கு மாபெரும் வருவாயையும் தந்தன என்பது மட்டுமல்ல, நாட்டிற்கு அவை ஒரு நிலையான பெரும் சொத்தாக நிலைபெற்றன! இந்த மாபெரும் வளர்ச்சியை கண்டு வயிறு ...